அகஸ்தியர் வைத்திய சதகம் – 30

அகஸ்தியர் வைத்திய சதகம் – 30

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 30*

காணப்பா மூலமதில் துரியாதீதம் கலந்து நிற்கும் அஞ்சோடே முப்பத்தாறும்
தோணப்பாமுன்மொழிந்த அறுபதோடே சொன்னோமே தத்துவங்கள் தொண்ணூற்றாறாய்
ஊணப்பா உடலாச்சு உயிருமாச்சு உயிர்போனால் பிணமாச்சு உயிர் போம் முன்னே
பூணப்பா வாதபித்த சேத்துமத்தால் பூண்டெடுத்த தேக வளம் புகலுவேனே.

*பொருள் :* மூலாதாரத்தில் துரியாதீதம் நிற்கும், இவைகள் 36-ம், முன் சொன்ன 60-ம் சேர்த்து 96 தத்துவங்கள் ஆகும். ஆக உடலாகி, உயிராகி,இவ்வுயுர் போனால் பிணமும் ஆகும். உயிர் போவதற்கு முன்னே வாத பித்த சேத்துமத்தால் பூண்ட உடல் கூறை நாம் காணலாம்.

Share