அபூர்வ மாந்திரீகம்

அபூர்வ மாந்திரீகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை மயிலாப்பூர் சென்ற போது அங்கே கிடைத்த அபூர்வ மந்தீரீக புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. அந்த நூலில் குறிப்பிட்டுள்ள அபூர்வ பல ரகசிய குறிப்புகளை நம் சித்தர்களின் குரல் அன்பர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி நலன் பெற வேண்டுவதற்காக பகிர்கிறேன் இன்று. குரு அருள் , 210 சித்தர்களின் அருள் என்றும் துணை நிற்கும்.

அன்பர்களே சிலர் மந்திரம் எப்படி வேலை செய்கின்றது…? உண்மையில் மந்திரத்தின் தாக்கம் பிறரை சென்றடைய முடியுமா…? இப்படி பல கேள்விகள் என் திருமந்திர வகுப்பில் பயிலும் நண்பர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த சந்தேகங்களை தீர்ப்பதற்காகவே இன்று இந்த முழு பதிவையும் விரிவாக பதிவிடுகிறேன். உணர்ந்து, ஆழ்ந்து படியுங்கள். படித்து முடிந்ததும் உங்களுக்கே தெளிவு வரும்…..

சரி வாங்க தலைப்புக்கு செல்வோம்,
மனிதன் எந்த ஒரு விடத்தை மனதார தன் ஆழ்மனதோடு சம்மந்தப்படுத்தி சொன்னாலும் அந்தவார்த்தைகள் எல்லாமே மந்திரங்கள்.
தமிழ் மொழியே ஒரு மந்திர மொழி தான்
உலகிற்க்கு எந்த மொழிக்கும் இல்லாத தனி சிறப்பு தமிழுக்கு உண்டு.

பொதுவாக பஞ்சாட்சர எழுத்து மந்திரங்களை பிரணவத்தோடு சேர்த்து உச்சரிக்கும் போது வான்காந்த அலைகள் நமது ஊண்காந்த அலைகளோடு மோதி ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது.
இந்த அதிர்வலைகள் நமது உடலில் வந்து நிறப்பும். இப்படி நிறம்பி வழியும் போது நமக்கு சில அமானுஷ்ய மாற்றங்கள் நிகழும். இதன் மூலம் நாம் சொன்ன மந்திரத்திற்க்கான சித்தி கிடைத்துவிட்டதை உறுதிசெய்துக் கொள்ளலாம்.

இப்போ நமக்கு மந்திர சித்தி என்ற வான்காந்த அலைகள் நம் உடலில் அதாவது ஊண்காந்த அலைகளுடன் கலந்துவிடும். இது எப்படி தெரியுமா….
சிறிய கற்பனை ஒரு வெத்து பாட்டிலில் நீர் ஊற்றினால் அது எப்படி நிரம்பி மேல்நோக்கி எழுமோ அதேப்போல நம் உடலில் வான் காந்த அலைகள் மந்திரம் சொல்ல சொல்ல மெதுவாக நிரம்பிக்கொண்டே இருக்கும்,

இதை நாம் எண்ண அலைகளாக மாற்றினால் அதை வைத்தே பிறகுக்கு நன்மையும் செய்யலாம் தீமையும் செய்யலாம்.

ஒரு மனித மூளைக்கும் இன்னொரு மனித மூளைக்கும் நமது மனவலிமையால் ஒருவரை ஒருவர் பார்க்காமலே சமிக்ஞை அனுப்ப முடியும்.
உதாரணமாக ஒருவர் சென்னையில் இருக்கின்றார். இன்னொருவர் மும்பையில் இருக்கின்றார் அவர் புகைப்படம் மட்டும் தான் உள்ளது, வேறு எந்த தகலும் தெரியாது. ஆனால் இவருக்கு ஒரு பெண்ணின் மேல் உள்ள முறையற்ற அன்பை பிரித்து வைக்க வேண்டும் மென்றால் எந்த பெண் என்ற அடையாளத்தையும் சமிக்ஞை மூலம் செலுத்தி அந்த பெண்ணையும் நிரந்தரமாக பிரித்து விடலாம்.

இப்படியாக சென்னையில் இருக்கும் நபர் எந்த ஒரு ஊடகங்களும் இல்லாமல் அவரின் மன வலிமையைக்கொண்டே ஒரு செய்தியை மும்மையில் உள்ள நபரின் மூளைக்கு சமிக்ஞை மூலம் அனுப்ப முடியும். அந்த செய்தியை மும்பையில் உள்ளவரால் உணர முடியும்.
சென்னையில் உள்ளவர் ஒரு பூவை நுகர்ந்து அந்த சமிக்ஞையை அனுப்பினால் 10×10ரூம்பல மும்பையில் இருப்பவருக்கு அதே வாசனை உணர முடியும்.

இதே முறையில் தான் நாம் அஷ்ட கர்மங்களையும் செய்யலாம் ஒருவரின் புகைப்படத்தை வைத்தே அவருக்கு வசியம், மோகனம், ஸ்தம்பனம், பேதனம், வித்வேடனம், உச்சாடனம், ஆக்ரூடனம், மாரணம் என எதையும் செய்யலாம்.
இது எப்படி சாத்தியம் என்றால்

ஒரு வானொலி நிலையத்தில் ஒளிபரப்பபடும் ஒலி அலைகள் எப்படி கற்றலைகளாக மாறி பல மைல் தூரம் கடந்து டிரான்சிஸ்டர் மூலம் ஃப்ரீக்வன்ஸியை பிரித்து அதே ஒலி அதிர்வை ஏற்படுத்தி அங்கே அனுப்பும் பாடல் நம்மால் கேட்க முடிகின்றதோ,

தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அனுப்படும் ஒலிஒளிகள் கூட காற்றின் மூலம் கடந்து பின் நிலையான ஒலி ஒளி அலைகளாக மாறுகின்றதோ அதேப்போல தான் மனம் ஒடுங்கிய ஒருவர் அதாவது மனம் செம்மையான ஒருவர் தனது மன வலிமையால் எங்கிருந்துக்கொண்டும் இன்னொருவரை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும், காக்கவும் முடியும்.

மனிதனின் மூளைக்கு (அ) மனதுக்கு இவ்வளவு சக்தி உண்டு.
இதை பயிற்சியின் மூலம் அறிந்துக்கொண்டால் மிக துல்லியமாக நாம் ஒரு இலக்கை குறிவைத்து நமது எண்ணலைகள் மூலம் பல சாகசங்களை நிகழ்த்தலாம்.

மனம் செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்பார்கள்.
அந்த மனதை செம்மைப்படுத்த கூட இன்றைய காலத்தில் மந்திரங்கள் ஓதவேண்டிய நிலையில் இருக்கின்றார் அதிலும் சரியான குருமார்கள் இல்லாமல் சிலர் இத்தகய கலைகளை கற்க முடியாமலும் ஆதங்கப்படுகின்றார்கள்.

இதை தவிர்த்து வாதைகள் மூலமாகவும், சில பிசாசுகளின் மூலமாகவும் சிலர் தூய தேவதைகள் மூலமாகவும் மேற்சொன்ன செயல்களை நிகழ்த்துகின்றார்கள்.
நான் மனவலிமையிலும், தூய தெய்வீக சக்தியாலும் பல முறை செய்து பார்த்து வெற்றியும் கொண்டுள்ளேன்.,

இன்னும் சிலர் துர்தேவதை, துர் ஆத்மாக்களை வைத்தும் செய்வார்கள் அது எப்படி வேலை செய்யும் என்பதை சுருக்கமாக சொல்லி விடுகின்றேன்.

மனிதனுக்கு ஆன்மாவும் உண்டு பூத உடலும் உண்டு. ஆனால் பேய் பிசாசுகள், துர்மரணமடைந்த ஆவிகள் போன்றவைக்கு பூத உடல் இல்லை.
இதனால் அதுக்கள் புலனை அடக்க வேண்டியதில்லை அதற்க்கு இயல்பாகவே அந்த அமானுஷ்ய சக்தி உண்டு.

ஆகையால் அந்த தீய சக்திகளையோ, அல்லது தூய சக்திகளையோ இயக்க மனிதனுக்கு அந்த தந்திர யுத்தி தெரிந்ததால் அவைகளை ஏமாற்றி தனக்கு ஆகவேண்டிய காரீயங்களை நிறைவேற்றிக்கொள்வான், இப்படி சில மாந்திரீகர்களும் உண்டு.

ஆனால் இது விஷ பாம்பு வாயில் விரல் விட்டு விளையாடுவதை போன்றது என்றாவது ஒரு நாள் நம்மை ஜோலி முடித்துவிடும். ஆகவே மாந்திரீகத்தில் பாதுகாப்பான முறை மனோவசிய சக்தி மூலம் அஷ்டகர்மங்களை செய்வது, அல்லது தூய எண்ணம் கொண்ட தேவதைகளை வணங்கி நமக்கான காரீயங்களை செய்வது இது மட்டுமே நம் ஆயுள் முழுக்க நிலைக்கு.
தீய சக்திகளால் நம் ஆயுளே விரைவில் முடிக்கும்.

****************

மாந்திரிகம் என்றால் என்ன…?

மாந்திரீகம் என்றவுடன் நமக்கெல்லாம் ஒரு பயம் நம்மையே அறியாமல் நம்மை பற்றிக்கொள்ளும், காரணம் நம் முன்னோர்கள் நமக்கு மாந்திரீகம் என்று சொல்லும் போது அதை சார்ந்த பயத்தையும் சேர்த்தே விதைத்து வைத்துள்ளார்கள். உண்மையில் மாந்திரீகம் என்பது கொடிய கலை அல்ல.
அது தெய்வீகமான கலை மிகவும் மிருதுவான கலை ஆனால் இதை கண்டு ஏன் மக்களுக்கு இன்னும் பயம் இதன் இரகசியம் தான் என்ன..?

சித்தர்கள் பொதுவாக எந்த மதத்திற்க்கு சொந்தமானவர்களும் அல்ல
சித்தர்களுக்கு மதமே இல்லை.
இயற்கையான மனித உடலை வருத்தி தியானம் செய்து யோகம், ஞானம், சோதிடம்.. வைத்தியம் போன்ற கலைகளை கண்டாராய்ந்து அதில் தேர்ச்சியும் பெற்றார்கள்.

ஒரு மனிதனுக்கு மன வலிமை பெற்நால் அவன் ஞான சித்தியடைகின்றான்
அவனேயே சித்தன் என்று அழைப்படுகொன்றான், மனதை அடக்க வேண்டுமால் முதலில் மூச்சை ஒடுக்க வேண்டும். மூச்சை ஒடுக்கும் பயற்சி தான் யோகம் இந்த யோகத்தின் மூலமாக மனிதன் அஷ்டமா சித்தியை பெறுகின்றான்.

அது என்ன அஷ்டமா சித்து சிலருக்கு உண்மையில் இதன் அர்த்தம் தெரியாது ஆக இந்த பதிவில் அதை பற்றி படித்தால் தான் மாந்திரீகத்தின் உண்மையை உணர முடியும்.

அஷ்டமா சித்துவில் ஒவ்வொரு சித்துவும் ஒவ்வொரு சிறப்பம்சங்களை பொற்றுள்ளது.
அதை சுருக்கமாக பார்க்கலாம்,

#அனிமா
இந்த சித்து இருந்தால் தனது பூத உடலை சுருக்கலாம் அதாவது ஒரு அணு அளவுக்கு கூட சிறியதாக தன் உடலை மாற்றிக்கொல்லலாம் இன்றும் சில கோவில்களில் மிக சிறிய சிற்பங்கள், நுண்ணிய சில வேலைபாடுகள்,
ஒற்றை தூன்களின் கடுவே சுழல் கல்,
யாழி வாயில் பந்து போன்ற சுழல் கற்கள் இதேல்லாம் எப்படி வைத்தார்கள் என்று மனித சிந்திக்க முடியாத சில வித்தைகளை மிக சிறிய உருவில் இருந்து சித்தர்கள் உருவாக்கிய சிற்பங்களே அவைகள்.

#மகிமா
இந்த சித்துவை ஒரு மனிதன் பெற்றிருந்தால் தனது உடலை பூதாகரமாக மாற்றலாம். அதாவது மலையை விட மலமடங்கு பெருத்த உயர்ந்த உடலாகவும் கூட நாம் நினைத்த மாத்திரத்தில் மாறலாம். புராணங்களில் விஸ்பரூப கதையில் வரும் மிகப்பொரிய உடல்களை போன்றும் இந்து சித்துவால் மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த சித்துவால் கூட தஞ்சை பெரியகோவில் கோபுர 80டன் விமானத்தை ஒரு சித்தன் தூக்கி நிறுத்தியிருக்க முடியும்.

#கரிமா.
இந்த சித்து பெற்ற ஒருவனால் மாய தோற்றம் , சூட்சம உடலாக இந்த உடலை மறைத்துக்கொண்டு எங்கும் எதிலும் ஊடுறவ முடியும்.

#இலகிமா
இந்த சித்துவால் தன் உடலை மிக லேசான பஞ்சு மாதரி மாற்றிக்கொண்டு காற்றில் மிதந்து செல்லலாம். ஆகாய மார்க்கம எங்கும் சென்று வரலாம்.

#பிராத்தி
இது தான் அடைய நினைக்கும் எந்த ஒரு பொருளையும் நினைத்தவுடன் அடைந்துவிடும் அற்புதமான சித்து இது.

#பிரகாமியம்
இது இயற்கை விதிக்கு எதிராக செயபடும்சித்து, புயல், மழை, பூகம்பம், சுனாமி, சூறாவளி போன்ற செயல்கள் நிகழும் போது இதற்க்கிடையில் நாம் அவைகளுக்கு எதிராக செயல்பட முடியும்.

#வசித்துவம்.
இது அனைத்து உயிர்களையும் , பஞ்ச பூதங்களையும் வசியப்படுத்தும் மகா வசிய சித்துமுறையாகும்.

#ஈசத்துவம்
இந்த சித்தியானது தன்னை இறைவடியாக மாற்றிக்கொள்வது எந்த ஒரு ஜட பொருளுக்கும் உயிரூட்டி காக்கவும், அழிக்கவும் முடியும் இது சிவனுக்கு நிகரான செயல்பாடுகளை கொண்டது. இப்படியாக எட்டுவகையான சித்துக்களை தான் அஷ்டமா சித்து என்கிறார்கள்.

இந்த ஈசத்துவம் என்பது தான் மாந்திரீக கலை. இது ஒரு அற்புதமான சித்து இதிலும் எட்டு வகை கர்மா உண்டு.
வசியம்,
மோகனம்,
ஸ்தம்பனம்,
பேதனம்,
வித்வேடனம்,
உச்சாடனம்,
ஆக்ரூடனம்,
மாரணம்.

இதில் மாரணம் எனபது தான் அழித்தலுக்கான கர்மா,
இதை சரியான இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உதாரணமாக
சில நோய்களை அழிக்கலாம்,
எதிரிகளை அழிக்கலாம்,
சில தூர் தேவதைகளை அழிக்கலாம்,
பில்லி சூன்யங்களை அழிக்கலாம்,
ஒரு ஊருக்கே பிரச்சனையாக இருப்பவனை பிறர் நலனுக்காக ஒருவனை அழிக்கலாம்.
அதாவது ஒருவனால் ஒரு ஊரே பல பிரச்சனைகளை சந்திக்கின்றது,
அல்லாது ஒரு குடும்பம் பாதிக்கப்படுகின்றது என்றால் அவனை கொல்வதில் தவறில்லை. ஆனால் இந்த கலையை தவறாக பயன்படுத்தினால் அதுக்கான தண்டனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்.

இந்த மகா வித்தையை பயன்படுத்தி அப்பாவிமக்களை சிலர் ஏமாற்றி இருக்கலாம், சிலர் தாமாகவே அச்சம்கொண்டுருக்கலாம்.
ஆனால் மாந்திரீகம் என்பது
முன்று தொழிலும் படைத்தல், காத்தல், அழித்தலையும் செய்யும் இதை முறையாக உண்மையாக செய்பவர் ஈசனுக்கு நிகரானவர்கள். மாந்திரீக கலை என்பது கூர்மையான கத்திப்போன்றது.
இந்த கத்தியை வைத்து அறுவை சிகிச்சையும் செய்யலாம், கொலையும் செய்யலாம், மாந்திரீகத்தை யார் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே அதன் குணத்தை உறுதிப்படுத்தலாம்.
நல்ல்வர்களிடம் இருந்தால் நல்லதே நடக்கும்.

*******************

பொதுவாக மனிதன் உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் திரு மந்திரங்கள் தான். ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த வார்த்தையின் சத்தியாகவே நாம் மாறிவிடுவோம்,

உதாரணமாக நான் கடவுள் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே வந்தால் போதும் நீங்கள் ஒரு கடவுளாகவே மாறிவிடுவீர்.
நான் ஒரு பைத்தியம் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் பைத்தியமாகவே மாறிவிடுவீர்கள்.
இது பொய் அல்ல.
உண்மை.

நாம் பேசும் அகாரம், இகாராம், உகாரம், எகாரத்தில் மெய் எழுத்துக்கள் சேர்ந்தால் அது தான் மந்திரம்,
விளக்கமாக சொல்லவேண்டுமெனில்
க. ங ச. ஞ.ட.ண.த.ந.ப.ம.ய.ர.ல.வ.ஸ.ஷ.ஜ. ஹ.க்ஷ. அஹ ஆகிய இருபது மெய் எழுத்துகளுடன் (ம்)
என்ற எழுத்தை சேர்த்தால் மந்திர பீஜம் உண்டாகும்.

ஓம் என்பது பிரணவ மந்திரம் இது உயிராகும்.
இந்த உயிர் எழுத்தை முதலில் கொண்டு
அடுத்து மேல் உள்ள 20எழுத்துகளோடு “ம்” என்ற எழுதை சேர்த்துக்கொண்டு கடையில் “நம” என்று முடித்தால் இது ஒரு மந்திரம்.
அதாவது ங காரமும் ம காரமும் ஒவ்வொரு எழுத்துடனும் சேரும் மந்திரங்களை பல முறை உச்சரிக்கும் போது மனிதனுக்கு சித்தி முக்தி இரண்டும் கைக்கூடுகின்றது.

ம’காரத்தில் சித்தியும் ங’காரத்தில் முக்தியும் கிடைக்கின்றது.

இதன் அடிப்படையில் நாம் பார்த்தால் மாந்திரீகம் என்பது
முதல் படி நிலை அதாவது,

ஓம் அங் நம. என்று நாம் மந்திரத்தை பல ஆயிரம் முறை திரும்ப திரும்ப சொல்லும்போது
அந்த மந்திரம் சித்தியாகும். நமக்காக ம்ந்திர சித்தி செய்துக்கொள்ளும் போது
நம என்றும்,
பிறருக்கும் சேர்ந்து சொல்லும் போது நம்ஹ என்று சொல்ல வேண்டும்.

கொஞ்சம் புரியும் படி எழுதுகின்றேன்
மெதுவாக படியுங்கள்.

அம் (ஓம் அம் நம) என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொன்னால் எமனையே வெல்லலாம்.
அதாவது மரணமில்லாத பெருவாழ்வு சித்தர்களைப்போல ஜீவசமாதி நிலையை அடையலாம்.
(ஓம் ஆம் நம) என்ற மந்திரத்தை பிரயோகம் செய்தால் ஆகர்ஷண சக்தி நமக்கு கிடைக்கும் ஆகர்ஷண சக்தி என்பது எந்த ஒரு பொருளையும் நம்மிடம் தானாகவே வரவைக்கலாம்.

(ஓம் இம் நம) என்றால் உடலுக்கும் வலிமையை கொடுக்கும்.
(ஓம் ஈம் நம) நமக்கு வாக்கு பலிதம் உண்டாகும் இது ஜோதிடர்கள், குறியாடிகள் இந்த மந்திரத்தை செபித்துவரலாம். (ஓம் உம் நம) உச்சாடனம் என்ற கர்மம் கைகூடும். (ஓம் எம் நம) என்றால் மனிதனுக்கு சாத்வீக குணம் உண்டாகும்.
(ஓம் ஏம் நம) என்றால் அவருக்கு சகல வசியமும் உண்டாகும். (ஓம் ஐம் நம) என்றால் பெண்களுக்கு ஆண் வசியமாவார்கள்.
(ஓம் ஓம் நம) என்றால் சொல் பலிதம் உண்டாகும்.

(ஓம் ஔம் நம) என்றால் நாவில் கலைவாணி எனும் கல்வி அறிவு கூடும்.
(ஓம் கம் நம) என்றால் எந்த தடைகளும் அகலும்.
(ஓம் ஞம் நம) என்றால் கோபம் அதிகமாக வரும் உக்கிரமாக இருப்பார்கள்.
(ஓம் சம் நம) என்றால் ஜன வசியம் உண்டாகும்.
(ஓம் ஞம் நம) என்றால் மரணத்தை தள்ளிப்போடலாம்.

(ஓம் டம் நம) என்றால் வியாதிகள், விஷம் போன்றவைகளை ஒழிக்கலாம்.
(ஓம் ணம் நம) என்பது அனைவரையும் நம் மீது மோகம் கொள்ள வைக்கலாம்.
(ஓம் தம் நம) என்றால் பொன் பொருள் செல்வம் சேரும்.
(ஓம் நம் நம) என்றால் ஸ்தம்பணசித்தி அதாவது எதையும் தடுத்து நிறுத்தும் சக்தி கிடைக்கும்.
(ஓம் பம் நம) இது இது சகல பூத பேய் பிசாசுகளையும் துர்தேவதைகளையும் விரட்டும்.
(ஓம் மம் நம) என்றால் எதிரிகள் நம்மீது மோகம் கொண்டு அடிமையாகிவிடுவார்கள்.

(ஓம் யம் நம) என்றால்
மனதாலூம் உடலாலும் எந்த இடத்திற்க்கும் சஞ்சாராம் செய்யலாம்
அதாவது எட்டுதிக்கெங்கிலும் கடந்து சென்று வரலாம்.
(ஓம் ரம் நம) என்றால் நினைத்த இடத்தில் நெருப்பை மூட்டலாம்
அக்கி பூதத்தின் அருள் கிடைக்கும்.
(ஓம் லம் நம) என்றால் இந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்கும் சக்தி கிடைக்கும்.
(ஓம் வம் நம) என்றால் வியாபாராம் தடையின்றி நடக்கும்.

(ஓம் ஸம் நம) என்றால் அனைத்து பலமும் வந்து சேரும்.
(ஓம் ஷம் நம) என்பதால் இராஜயோகம் கைக்கூடும்.
(ஓம் ஜம் நம) என்றால் எப்படிபட்ட துஷ்ட தேவதைகளும் விலகிப்போகும்.
(ஓம் ஹம் நம) என்று செபித்து வந்தால் தெய்வ உருவங்கள் நேரில் தோன்றும்.
(ஓம் க்ஷம் நம) என்றால் இந்த ஊண் உடலில் ஆக்கிரமிக்கும் துன்பம், துயரம், வியாதி, மூதேவி எனும் தரித்திரம், பில்லி சூன்யம், வைப்பு ஓம்பல் ஆகியவை தூசுபோல பறந்தோடிவிடும்.

இகு மாந்திரீகத்தின் அடிப்படி தத்துவம்
நான் சொன்ன மந்திரங்களை
ஒவ்வொன்றாக ஒரு லட்சம் முறை தியாணத்தில் அமர்ந்து செபித்து சித்திப்னொற்றால்
பின் நீங்கள் முதல் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்புக்கு தயாராகலாம்.
எந்த ஒரு சூழலிலும் ஒரே நேரத்தில் இன்னொரும் மந்திரம் சேர்த்து சொல்லக்கூடாது.
வேகமாக சததம் போட்டும் சொல்ல கூடாது மனதிலே அமைதியாக பிழை இல்லாமல் சொல்ல வேண்டும்.
வேக வேகமாக சொல்லக்கூடாது.
நாங்களும் செய்துப்பாருங்கள்.
மிந்கிரம் என்பது பெரிய பெரிய சூத்திரமெல்லாம் ஒன்றுமே இல்லை.
இது தான் உண்மையான மாந்திரீக படிநிலை.

இதன் அடுத்த பரிமாணம் தான் பஞ்சாட்சர மந்திரம். இப்படி ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சக்தியை கொண்டுள்ளது.

********************

பஞ்சாக்சர எழுத்தின் ரகசியம் என்ன…?

மாந்திரீகத்தில் மூலம் ஐந்து அட்சரங்களே. அவைகள ந ம சி வ ய எனும் பஞ்சாட்சரங்கள் இந்த ஒவ்வொரு அட்சரங்களும் ஒவ்வொரு பூதங்களை சார்ந்துள்ளது.

ந – என்ற அட்சரம் மண் தத்துவமாகவும்,
ம- என்ற அட்சரம் நீர் தத்துவமாகவும்,
சி- என்ற அட்சரம் நெருப்பு தத்துவமாகவும்,
வ- என்ற அட்சரம் காற்று தத்துவமாகவும்,
ய- என்ற அட்சரம் ஆகாய தத்துவமாகவும் செயல் படுகின்றது.

இதனோடு ஓம் என்ற பிரணவம் சேரும் போது மந்திரம் உயிர்பொற்று வலுப்பொறுகின்றது. அதாவது பஞ்ச பூதங்கள் தான் மாந்திரீகத்தின் அடிப்படை தத்துவம் அல்லது மூலம் என்றுக்கூட சொல்லலாம்.
அஷ்ட கர்மங்களுக்கும் இந்த பஞ்சாட்சரங்கள் தான் ஆதாரமாகி நிற்கின்றது.

இந்த எழுத்துக்களை சித்தர்களே உருவாக்கினார்கள் என்றாலும் அந்த எழுத்தின் அதிர்வலையின் இரகசியங்களை துல்லியமாக கணித்துள்வார்கள். சித்த பொருமக்கள்.
பஞ்ச பூதமான இந்த உடலில் மனம் என்பது ஆகாய தத்துவத்தில் தான் இயங்குகன்றது.

இந்த ஆகாயத்தின் எல்லையும், மனித மனதின் எல்லையும் எவராலும் அறிய முடியாது இது தான் கடவுள் நிலை கடவுளை உணர மட்டுமே முடியும் அதை ஒரு நாளும் பார்க்க முடியாது.
இப்போ நீங்கள் கடவுளை உணர மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுக்குள் இருக்கும் பஞ்ச பூதத்தையும் ஒரு நிலைப்படுத்துங்கள்.

அடுத்து மூச்சை மெதுவாக இழுத்து மெல்ல வெளியே விட்டு ந ம சி வ ய என்பதை ஓம் என்ற பிரணவத்தோடு சேர்த்து நிதானமாக சொல்லுங்கள்.
இப்படி தொடர்ந்து இந்த நமசிவய மந்திரத்தை சொல்லும் போது,
நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்கள் ஒருநிலை பெறும். அதாவது ஒரு பெரிய பிரளயம் நமக்குள் ஏற்படுவதை நாம் தத்துரூபமாக உணரமுடியும்.

இந்தமாற்றம் நிகழ்ந்து மேலும் தெளிவடையும் போது மனம் கடவுள் நிலைக்கு சென்றுவிடுகிறது.

இந்த நமசிவய மந்திரத்தை அட்சர வடிமாக்கி அதை கட்டங்களில் அடைத்து அதுற்கு துணை எழுத்துக்களாக ஐயும், கிலியும், சௌவும், ரீயும், ஸ்ரீயும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பஞ்சபூதங்களின் வடிவமான நாற்கோணம், முக்கோணம், அறுங்கோணம், பிறை, வட்டம் ,
பொன்றவற்றினுள் அடைத்து அதற்குறிய மந்திர உச்சாடணங்களை கொடுத்தால் மந்திரம் மகா சக்தியாக உயிர்ப்பெறும்.

தொடர்ந்து இந்த பஞ்சாட்ரத்தை சொல்லி வழிபடுவதின் மூலம் அஷ்ட கர்மங்களும் சித்திபெறும்.
அதாவது, அஷ்ட கர்ம மாந்திரீகத்தில்
பஞ்சாட்சரம்

1.வசியத்திற்க்கு வ ய ந ம சி,
2.மோகனத்திற்க்கு சி வ ய ந ம,
3.ஸ்தம்பனத்திற்க்கு ந ம சி வ ய,
4.பேதனத்திற்க்கு ம வ ந சி ய,
5.ஆக்ரூடனத்திற்க்கு வ ந சி ய ம,
6.வித்வேடனத்திற்க்கு சி ய ம வ ந,
7.உச்சாடனத்திற்கு ய ம ந சி வ.
8.மாரணத்திற்க்கு ம சி வ ய ந
இது மூலகுரு அகத்தியர் சொன்னது.

இதில் ஒரு வார்த்தை, அல்லது அட்சரம், தவறினால் அது நமக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

எந்த ஒரு மந்திரமானாலும் அதை குறைந்தது ஒரு லட்சம் முறை செபிக்க வேண்டும், ஏனோ தானோ என்று செபிக்க கூடது மெதுவாக நிறுத்து நிதானமாக உச்சரிக்க வேண்டும்.

நாம் மந்திரங்கள் சொல்லும் போது மூச்சு கும்பக நிலையில் அதிக நேரம் இருக்கும் படி பார்த்துக்கொள்வது நல்லது.

குரு ஆலோசனைப்படி இதை முறையாக கற்பது உங்களுக்கு நல்லது.

******************

வசியம் என்றால் என்ன?

இறைவனை தியானித்து மந்திர அட்சரங்களை ஓதி, தனக்குத்தானே நலன்களை செய்துக்கொள்ள கூடிய கர்ம பிரயோகம் தான் வசியம் என்பது.

இது தன்னைத்தானே தன்னை இழக்காமல் மற்றவர்களை தன் வசம் ஈர்த்து, அவர்களை தனக்கு ஆயுட்கால ஆதரவாளராக்கிக்கொள்வது அதாவது தனக்கு ஆயுள் முழுக்க துணையாக ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் கவர்ச்சிக்கொண்டு நல்வாழ்க்கை வாழ்வதாகும்.

இந்த உலகில் இரசனை மிகுந்த இடத்தில் தான் காதல் அல்லது பாலிண ஈர்ப்பு அதிகமாக காணப்படும், இதை தனக்கு தானே ஒரு ரசிகரை ஏற்படுத்திக்கொள்ளும் முறை என்றுக்கூட சொல்லாம்.

இந்த இரசனையை செயற்க்கையாக உருவாக்க வேண்டுமென்றால் மனித உடலில் இர்சாயண மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா…?

இதற்கு சித்தர்கள் மனோவசியம், சில ஆன்மாக்காளின் மூலம் மனதை மாற்றி அமைப்பது, சில யந்திர, தந்திரங்கள் மூலமாக மனதை மாற்றுவது,
சில சில உயிர்களை கொன்று அதன் மூலம் மருந்து தயாரித்து சாப்பிட கொடுப்பது என பல்வேறு வழிகளை கூறுகின்றார்கள்.

அசைவ முறை இடுமருந்தை பலர் செய்து கொடுத்து உண்ணச்சொல்லி விடுகின்றார்கள் இதனால் பக்கவிளைவுகள் தான் மிஞ்சும்.

இந்திரகோபம் பூச்சி, குழிபன்றி பூச்சி, தயிரன்னப்பூச்சி, ஆண்மகனின் இந்திரியம், பெண் மகளின் அண்டக நீர். மற்றும் மாதவிடாய் கழிவு போன்ற அறுவருக்கதக்க பொருட்களின் மூலம் செய்யும் இடுமருந்துக்களை உண்ணக்கொடுப்பதால்
இது குடலில் நின்று கேன்ஷர் போன்ற நோய்களை ஏற்படுத்திவிடும்.

ஆகவே ஒரு மாந்திரீகர் முடிந்தவரை உயிர் அணுக்களை வைத்து அசைவ இடுமருந்து தயாரிக்காமல்,

சைவ முறையில் மூலிகைகளைக்கொண்டு தாயரிக்கும் இடுமருந்துக்களை செய்து கொடுத்தால் அதை உண்பவருக்கு இயற்க்கை வழியிலான இரசாயண மாற்றம் நிகழும்.
கணவன் மனைவிக்குள் மட்டுமே இந்த முறையை செய்ய வேண்டும்,
ஏனென்றால் கணவன் மனைவிக்கு இரத்தம் கலப்பு இருக்கும் அவர்களுக்கு உமிழ்நீர் மற்றும் இரத்தம் கலந்து மூலிகை இடுமருந்தின் மூலம் இனகவர்ச்சியை மீண்டும் தூண்டலாம்.

ஆனால் மற்றவருக்கும், சம்மந்தமில்லாதவர்களுக்கும் இதுப்போன்று உமிழ்நீர், இரத்தம், விந்து முறைகளை பயன்படுத்த கூடாது.
இதனால் பல பின் விளைவுகள் ஏற்படும்.
ஆகவே முடிந்தவரை மனோவசியத்தின் மூலம் யந்திர மந்திர தந்திர வழிகளில் வசியம் செய்வதே இன்றைய கால சூழலுக்கு சிறந்த முறையாகும்.
மந்திரம் கால் மதி முக்கால் என்பது வழக்கத்தில் செயலாக்கப் படாத அரிய மந்திரம்.

மதி முக்கால் என்பது, புத்திசாலிதானமாக மூலிகைகளின் தன்மைகளை அறிந்து, கூட்டி அதன் இயற்கையான மருத்துவ குணங்களை மேம்படுத்தி மாந்திரீக வழியில் அதனை செயலாற்றுவதே.

****************************

யந்திரங்கள் உண்மையா….?

யந்திரம் என்பது அஸ்டபந்தனங்களையும், எட்டுதிக்கெங்கும் உள்ளன காஸ்மிக் எனர்ஜிகளையும் கவர்ந்து இழுத்து நல்வினையை செய்யும் ஒரு அற்புத ஆற்றல் கொண்டது.

இந்த யந்திரங்களை முறையக வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒவ்வொரு யந்திரம் உண்டு, ஒவ்வொரு கர்மாவுக்கும் வேவ்வேறு யந்திரங்கள் உண்டு.

யந்திரங்களை எழுதும்போது எந்த தெய்வத்திற்க்கு எந்த உலோகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..?
எந்த நாட்கள்.. எந்த ஹோரை, எந்த நட்சத்திரம் என்று ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு நேர காலம் உண்டு.

இன்னும் சொல்ல வேண்டுமானால்
எந்த தெய்வத்திற்க்கு எந்த திசையை பார்த்த படி அமர்ந்து எழுத வேண்டும்,
எந்த எழுத்தாணியைக்கொண்டு எழுத வேண்டும் எந்த ஆடையை அணிந்து எழுத வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றது.

ஒரு செப்புத்தகடோ, வெள்ளி தகடோ, காரீய தகடோ, தாமிர தகடோ இரும்பு தகடோ, தங்க தகடோ ஏதாவது ஒன்றை தேவையான தேவதைக்கு அல்லது தேவையான கர்மத்திற்க்கு அல்லது காரத்திற்க்கு தேர்ந்தெடுத்த பின் அதை

1″×1″ அல்லது 3″×3″ அல்லது 6″ ×6″ அல்லது 9″×9″ போன்ற அளவுகளில் வெட்டி தேவையான யந்திரத்தை தங்ககம்பி அல்லது செப்புக்கம்பியால் தகடில் ஓட்டை விழாமல் அந்த தேவதை அல்லது கர்மாவுக்கு ஏற்ற திசையில் அதற்க்கான நிற ஆடையை அணிந்து தகுந்த திதி, ஹோரை, நட்சத்திரத்தில் எழுதவேண்டும்.

யந்திரத்தை குறை இல்லாமல் எழுதி எடுத்து அதை எலுமிச்சை சாறு, இளநீர், பன்னீர், திருநீர் பால் தேன் போன்றவைகளில் தலா 10நிமடங்கள் என்ற கணக்கில் வைத்து யந்திரத்தை சுத்தி செய்ய வேண்டும்
யந்திர சுத்தி செய்த பின் எந்த காரணத்திற்க்காகவும் அந்த யந்திரத்தை வெறும் தரையில் வைக்க கூடாது,

யந்திர சுத்தி முடித்த பின் அதற்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டும் பின்னர் யந்திரத்திற்க்கு பிராணபிரதிஷ்டை செய்ய வேண்டும். பிராண பிரதிஷ்டை செய்யும் போது அதற்க்கான மந்திரங்களை சொல்லும் போது யந்திரத்தை வலது கையால் தொட்டுக்கொண்டே சொல்ல வேண்டும், இப்படி செய்வதால் தான் நாம் சொல்லும் மந்திர அதிர்வலைகள் யந்திரத்தினுள் முழுமையாக சேர்க்கப்படும்
இந்த வேலைகளை நாம் செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்ய கூடாது,
யந்திரத்தையும் தரையில் வைத்து எழுத கூடாது முழுமையான இந்த வேலை முடியும் வரை அந்த இடத்தை விட்டு எழும்பவே கூடாது இப்படி நம் கையால் யந்திரம் எழுத முடித்தால் மட்டும்
தான் அந்த யந்திரம் முழுமையாக வேலை செய்யும்

கடைகளில் விற்பனை செய்யும் ரெடிமேட் யந்திரங்கள் விலை 8.ரூபாய், 10ரூபாய் மட்டும் தான். இதை சிலர் வாங்கி ஆயிரக்கணக்கில் விற்பனை செய்கிறார்கள். இந்த ரெடிமேட் யந்திரங்களில் எந்த சக்தியும் இறங்காது,
அப்படியே இறங்கினாலும் அது நிரந்திரமாக நிலைக்காது மொத்தத்தில் ரெடிமேட் யந்திரங்கள் வெறும் தகடு மட்டும் தான் அதில் எந்த பயனும் இல்லை. முறையான யந்திர முறையை அறிந்தவர்களிடம் பிரச்சனைகளை சொல்லுங்கள். அவர்களே உங்களுக்கான யந்திரங்களை தேர்வு செய்து உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். இனி போலி யந்திரங்களை வாங்கி ஏமார்ந்துப்போக வேண்டாம்

*****************

மனித உடலின் மிக பெரிய ரகசியம் என்ன தெரியுமா….?

விஞ்ஞானம் வளர்ச்சி இல்லாத காலத்தில் கருவறையில் குழந்தையின் வளர்சியை மட்டுமல்ல அதன் உருவாக்க தத்துவங்களையும் யோகிகளும் சித்தர்களும் மிக துள்ளியமாக கணித்துள்ளார்கள்.

ஒரு வளர்ந்த குழந்தையின்கையின் முழம் அளவுக்கணக்கில் 32முழம்,
குடல் 9மடிப்பாக மடிந்து இருக்கும் என்றும் உடலின் மயிர்த்துவாரங்கள் மூன்றரைக்கோடிகள் என்பதையும்

நமது உடலிலே 7வற்றாத கடல் உள்ளனவாம் அது காது நீர், உமிழ்நீர், குடல்நீர், மூக்குநீர், மூத்திரம், சுக்கிலம் இதில் 7வது பெருங்கடல் குருதி என்பதாம். நவ துவாரங்களும், 76000நாடிகளுடனும் உருவாகுமாம்.

ஒரு உடலின் கட்டமைப்பு என்பது அவர்வர் கையால் 8சாண் நீளமுடையதாகவும் வாய், கண்கள், மூக்கு, இரண்டு கால்கள், இரண்டு கைகள் என இந்த ஊண் உடல் 16கயிறுகளால் கட்டப்பட்டுள்ளதாக யோகிகள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதனின் ஆயுட்காலம் அவன் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பம் அனைத்தும் கருவறையில் இருக்கும் போது தீர்மானிக்கப்படுகிறதாம்.

கருவில் இருக்கும் போதே சிசுவின் உடல் கூட்டுக்குள் பத்துவகையான வாயுக்கள் குடியேறுகின்றனவாம்.
அது
1.பிராணன், 2.அபானன், 3.உதானன், 4.வியானன், 5.சமானன், 6.நாகன், 7.கூர்மன், 8.கிருகரன், 9.தேவதத்தன், 10.தனஞ்செயன். என்பவைகள்
சித்தர்கள் யோகிகள் நமது உடல்கூற்று தத்துவங்களை அலசும்போது ஆன்மீக இறை தத்துவங்களையும் கலந்தே பொருளீடு சமன் படுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

மனிதனின் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் முள்தண்டு எனும் இடத்தில் பாம்புப்போன்று தலைகீழாக சுருண்டுகிடக்கும் குண்டலினி வடிவமான இறைசக்தியை இயக்க தெரிந்தவனே யோகி அல்லது சித்தன் ஆகிறார்கள்.

இந்த உடலின் முதன்மையான இடம் தலைப்பகுதி இந்த இடத்தில் தான் ஆயிரம் தாமரை இதழ்களைக்கொண்ட தாமரையில் இறையை ஆக்கிரமிக்கும் (ஆன்டனா-towar உள்ளது) சஹஸ்ராரத்தில் குண்டலினி சக்தியை கொண்டுவந்து நிறுத்தி அமானுஷ்யங்களை நிகழ்த்துவார்கள் சித்தர்கள்.

மனித உடலில் நோய் தன்மைகளை அறிய வாத நாடி, பித்த நாடி, சிலோத்தும நாடி என மூன்று வகையாக பார்க்கிறார்கள். வாதநாடி என்பது வாயுவைக் காரணியாக கொண்டு இயங்கும், பித்த நாடி என்பது வெப்பத்தை காரணியக கொண்டும் இயங்கும்.

சிலோத்தமநாடி என்பது உடலில் உள்ள நீரை காரணியாக கொண்டு இயங்கும்.
இந்த மூன்று நாடிகளில் எந்த நாடி கூடினாலும் சரி, அல்லது குறைந்தாலும் சரி அது நோயின் அறிகுறியாக நாம் அறிகின்றோம்.

இதை இயற்கை முறையில் மூலிகைகளின் சத்துக்களை கொண்டே சரிப்படுத்தும் முறையை தான் சித்த மருத்துவம் என்றும். பிற்காலத்தில் மூலிகைகள் ( சீசனுக்கும்) பருவங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால் உணவாக உட்கொள்ள மூலிகை பதப்படுத்துதல், மற்றும் உடலில் அதே மூலிகை சாரம் ஏற்றிய ரசமணிகள் என்றெல்லாம் மருத்துவங்களை வகைப்படுத்தினார்கள்.
இதில் மூலிகை தேவையான நேரங்கில் உண்டு உடலை சரி செய்யும் முறையை விட.

பித்தம் வாயு கபம் எனும் மூன்றையும் சமமாக என்றும் வைத்துக்கொள்ள பேருதவியாக மூலிகை ரசாமணிகளே சிறந்த மருத்துவ முறை இதனால் உடலில் எந்த நோயும் நம்மை அனுகாது என்கிறார்கள்.

இது மருத்துவம் மட்டுமல்ல ஆன்மீக ஆற்றலுக்கும் இந்த இரசமணி பேருதவியாக இருக்கின்றது
சித்தர்கள் இந்த ஊண் உடலில் இருந்துக்கொண்டே பல பல சாகசங்களை செய்தார்கள் என்பது
இன்றும் நடமுறையில் உள்ளது
இந்த உடலை மனத்தின் சொல்படி இயங்க செய்பவன் யவனோ அவனே சித்தன்.

– சிவசித்தர் http://shivasiddhar.org

Share