அப்பர் கட்டமுது திருவிழா (8-5-2018 )

அப்பர் கட்டமுது திருவிழா (8-5-2018 )

சிவபெருமான் திருபைஞ்ஞிலி தலத்தில் அப்பரின் பசியை தீர்க்க பொதிசோறு கொடுத்த நாள்.

திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்து விட்டு திருநாவுக்கரசர் (அப்பர்) திருப்பைஞ்ஞிலியை நோக்கி சென்று கொண்டிருந்தார். காவிரியைக்கடந்து திருப்பைஞ்ஞிலியை நோக்கி நடந்த நாவுக்கரசர் (அப்பர்) பசியாலும், தாகத்தாலும் வருந்தினார்.

கோவிலுக்கு வரும் வழியில் சிவபெருமான் ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கினார். சோலையில் ஓய்வெடுத்த நாவுக்கரசர் முன் அந்தணர் ரூபத்தில் சிவபெருமான் தோன்றி அப்பரை அழைத்து, “என்னிடம் கட்டு சோறு உள்ளது. உண்டு பசியாறி செல்லலாம்’ என்றார்.

சாப்பிட்டு பொய்கையில் நீர் அருந்தி இருவரும் நடந்தனர். கோவிலுக்குள் சென்றதும் அந்தணராக வந்த சிவபெருமான் மாயமானார். அப்போது தான் இறைவனே அந்தனராக வந்து தனக்கு உணவு அளித்ததை உணர்ந்தார் அப்பர்.

“என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே’ என்று அப்பர் பெருமான் மெய்யுருகிப் பதிகம் பாடினார். இந்நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அப்பர் கட்டமுது விழா திருப்பைஞ்ஞிலியில் நடப்பது வழக்கம். இந்நன்னாளில் சிவனை வழிபட்டால் அன்னதோஷங்கள் விலகும். வயிற்று நோய்கள் குணமாகும்.

Share