அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோ🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோ🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி🔥
அருட்பெருஞ்ஜோ🔥
தனிப்பெருங்கருணை🔥
அருட்பெருஞ்ஜோதி🔥
🌻அருள்🌻
ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏
ஆறறிவு உடைய உயர்பிறப்பாகிய மனிதப் பிறவியை பெற்றுக்கொண்ட ஆன்மாக்களாகிய நமது இப்பிறவியின் லட்சியமே
ஆன்ம லாபத்தை அடைந்து கொள்வது என்பதுதான்,
ஆன்ம லாபம் என்பது…..
அனைத்து அண்டத்தையும் ,
அனைத்து புவனத்தையும்,
அனைத்து ஜீவர்களையும்,
அனைத்து பொருள்களையும்,
அனைத்து ஒழுக்கங்களையும்,
அனைத்து பயன்களையும்

தமது பூரண இயற்கை விளக்கமாகிய “அருட்சக்தியால்” தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினரான கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும்,எவ்விடத்தும்,
எவ்விதத்தும்,எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்தப் பிறவியினால் அடையதக்க ஆன்ம லாபம் என்பதாகும்🏵

நல்லது, மேற்படி கடவுளது இயற்கை இன்பத்தினால் அடையக்கூடிய பெருவாழ்வை எதனால் அடையக்கூடும் என்றால் ……..
கடவுளது இயற்கை விளக்கமாகிய “அருளைக்”கொண்டுதான் அடையக்கூடும் என்பதாம் 🌸

அப்படியென்றால், மேற்படி அருளைப் பெறுவதற்கான வழிஎது என்றால் …….
அதற்கு ஒரே வழி” ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்பதாகும்🌹

இப்பிரபஞ்சத்தில் ஆகாசம் அனாதியாய் இருக்கின்றது .
அனாதியான ஆகாசத்தில் காற்றும் அனாதியாக உள்ளது.

அதேபோன்று பரமாகாச சொரூபராகிய கடவுளது சமூகத்தில் அருட்சக்தியும் அனாதியாய் இருக்கின்றது 🌸

🏵அருட்பெருஞ்ஜோதி அகவல்🏵
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳�
“அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே”

“அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை அருளுற முயல்கவென்று அருளிய சிவமே”

“அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும் தெருளிது எனவே செப்பிய சிவமே”

“அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவம்”

“அருளறியார் தமை அறியார் எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே”

“அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே”

“அருள்வடிவு அதுவே அழியாத் தனிவடிவு அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே”

என்று அருளின் தன்மையை நமது வள்ளல் பெருமான் தெள்ளத் தெளிவாக அருட்பெருஞ்ஜோதி அகவல் மூலமாக நமக்கு தெரிவித்துள்ளார்கள்🌷
அப்படிப்பட்ட அந்த “அருள்”என்னும் சொல்லின் உட்பொருள் விளக்கத்தைப் பார்க்கும் பொருட்டு எனது சிற்றறிவால் விசாரித்து அறியத் தொடங்கிய தருணத்து , திருவருளால் ஒருவாறு உணர்த்தப்பட்ட விஷயத்தை ஆன்மநேய சகோதர சகோதரிகளாகிய தங்கள் அனைவருடன் இத்தருணத்தில் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றேன்🔥

🌸அருள் 🌸
அ+ர்+உ+ள்,
இதில் ,
“அ” மற்றும்” உ” என்பன சித்கலையாகவும் (அறிவுடைய உயிருக்கு ஒத்ததாகவும்),

“ர்”மற்றும் “ள்” என்பன ஜடசித்கலையாகவும் (அறிவற்ற உடம்பிற்கு ஒத்ததாகவும்) உள்ளன.

அ = அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாரத்துள் பதிநிலையை விளக்கக்கூடிய அக்கரமாகும்(எழுத்து)

பன்னிரெண்டு உயிர் எழுத்துகளில் தலையாய முதல் எழுத்தாகிய அகர எழுத்தாகும்.
🏵🏵🏵🏵🏵🏵🏵

உ=அகண்டாகார சித்தை விளக்கும் சக்திநிலை அக்கரமாகும்.

பன்னிரெண்டு உயிர் எழுத்துகளில் ஐந்தாவது எழுத்தாகிய உகர எழுத்தாகும்.
🏵🏵🏵🏵🏵🏵🏵

ர்= மெய்எழுத்து வரிசையில் பனிரெண்டாவது மெய்நிலை அக்கரமாகும்.

இந்த பனிரெண்டு என்பது அண்ட பிண்டத்தில் உள்ள அலகிலாத் சத்தி சத்தர்கள் மற்றத் தலைவர்கள் எல்லாரும் அரசுசெய்து
தத்துவ உலகமெல்லாம் தழைத்து விளங்கி ஓங்கச் செய்யும் செஞ்சுடராகிய காரிய ரூபியான சூரியனுக்குரிய பனிரெண்டு கலையை குறிக்க வந்த
அக்கரமாகும் ☀
🌹🌹🌹🌹🌹🌹🌹

ள்= மெய்யெழுத்து வரிசையில் பதினாறாவது மெய்நிலை அக்கரமாகும்.
இந்த பதினாறு என்பது பதியெலாம் தழைத்துப் பதம்பெறுவதற்குரிய அமுத நிதியெலாம் அளிக்கக்கூடிய நிறைதிரு மதியாகிய ,காரிய காரண ரூபியாகிய சந்திரனுக்குரிய பதினாறு பூரணக்கலையை குறிக்க வந்த அக்கரமாகும்🌙

ஆகலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையான அருள் என்ற ஒரு சொல்லில் வரும்,
அ−ர்−உ−ள் என்னும்
ஐந்து அலகுகளில்

“அ ” என்பது
சுத்தசிவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்,

“உ” என்பது,
சுத்தசிவத்தின் அருட்சக்தியையும்,

“ர்” என்பது சூரியகலையையும்,

“ள்” என்பது சந்திரக்கலையையும்
குறிப்பதாகக் கொள்ளலாம்🔥

இதற்கு பொருள் வேறு ஏதேனும் இருப்பின் கற்றறிந்த பெரியோர்கள் பிழை பொருத்தருள வேண்டியும் ,
வேறு பொருள் ஏதேனும் இருப்பின் ,அனைவரும் கற்றறிந்திட உலகறிய தெரிவித்திடவும் தயவுடன் வேண்டுகின்றேன் 🙏
…..நன்றி 🙏
….வள்ளல் மலரடிப் போற்றி
போற்றி🙏
…பெருமான் துணையில் 🙏
…வள்ளல் அடிமை🙏
…தயவுடன் வடலூர் இரமேஷ் 🙏

Share