ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா என்றால் என்ன…..???
———————————————–

நம் உடலுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.

அந்த சர்வ வல்லமை உடைய இறையாற்றல் என்பது, ஈர்ப்பு.

அந்த ஈர்ப்பு சக்தி தான் உடலாகவும், உயிராகவும் இருக்கும் காரணத்தினால் இந்த உடலுக்கும், உயிருக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு.

ஆகையால், அன்றாடம் ஒரு பத்து நிமிடாவது கண்களை மூடி அமைதியாக அமர்ந்து உடலை ஒரு சிலை போல பாவித்து அந்த உடலை கவனித்துக் கொண்டு சிறுது நேரம் “சும்மா” இருக்க வேண்டும்.

உடலை கவனித்தல் என்று சொல்கிறபோது முழுக்க முழுக்க உடலை கவனித்து உடலினுடைய இருப்புத் தன்மையை உணர்வுக்கு கொண்டு வர வேண்டும்.

எப்படி உணர்வுக்கு கொண்டு வருவது என்றால், முதலில் உடலின் பருமனை கவனிக்க வேண்டும்.

தொடர்ந்து இப்படியே நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து கவனிக்கும்போது உடலின் இருப்பை உணர முடியும்.

அந்த உணர்விலேயே இருந்து கொண்டு “சும்மா” இருந்தால் போதும்.

அப்போது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியை (cosmic energy) உடல் நன்றாக ஈர்த்துக் கொள்ளும்.

அது ஈர்க்கப் படுவதும், உடல் முழுவதும் பரவுவதும் ஒரு அழுத்தமான உணர்வு உள்முகமாகவும் வெளிமுகமாகவும் உணர்வுக்கு எட்ட ஆரம்பிக்கும். இது சக்தியை ஈர்த்துக் கொள்ளும்.

இந்தப் பழக்கம் வந்த பிறகு, பிரபஞ்ச காந்த சக்தியில் நிறைய ரகசியமான புள்ளிகள் இருக்கிறது.

அதை காந்தப் புள்ளிகள் (magnetic domain) என்று கூறுகிறோம்.

அதாவது இதற்கு முன்பு வாழ்ந்த மகான்கள், ஞானிகள், நிறைய விஷயங்களை ஆழமாக சிந்தித்திருப்பார்கள்.

நம் அறிவிற்கு எட்டாத சிந்தனைகள் கூட அத்தகைய சிந்தனைகள் எல்லாம், எண்ண அலைகள் அனைத்தும் காந்தப் புள்ளிகளாக பிரபஞ்ச காந்த களத்தில் பதிவாக இருக்கிறது.

எப்போது உடலை உணரக்கூடிய பழக்கமும், உடல் சக்தியை ஈர்க்கிறது என்ற உணர்வு நமக்கு கிடைக்கிறதோ, அதற்கு பிறகு சும்மா அமர்வதற்கு முன் ஒரு சங்கல்பத்தொடு அமர வேண்டும்.

நம்முடைய சங்கல்பம் என்னவென்றால், நம்முடைய ஆறாவது அறிவில் முழுமை அடைய வேண்டும்.

நமக்கு நிறைய செல்வங்கள் இருக்கிறது, தேவைகள் இருக்கிறது, ஆனாலும், அறிவில் முழுமையும், தெளிவும் அடைந்து விட்டோம் என்று சொன்னால், மற்ற செல்வங்களை எல்லாம் சிந்தித்து செயலாற்றி பெற முடியும்.

ஆகையினால், ஆறாவது அறிவில் முழுமை பெறுவதற்கு நமக்கு என்ன மாதிரியான சிந்தனைகள் வேண்டும்,

சிந்தனைகள் தூண்டப்பட வேண்டும் என்பதை இயற்க்கையிடம் ஒப்புவித்துவிட்டு “என் அறிவு முழுமை அடைவதற்கு என்ன மாதரியான சிந்தனைகள் வேண்டுமோ அதெல்லாம் தூண்டப்படட்டும்” என்று சங்கல்பத்தை ஏற்படுத்தி விட்டு பழையபடி “சும்மா” இருந்து உடலை கவனித்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பழக்கத்தில் நிலைக்க வேண்டும்.

அந்த சக்தியோடு இணைந்து எனென்ன வரும் என்றால், அறிவில் முழுமை பெற்ற மகான்கள் என்னென்ன காரியங்களை சிந்தித்து இயற்கை ரகசியங்களை புரிந்து கொண்டு ஆறாவது அறிவில் முழுமை பெற்றார்களோ

அந்த சினதனைக்கு உரிய கருவூலங்கள் எல்லாம் நம்முடைய மூளையினுடைய சிற்றறைகளில் பதிய ஆரம்பிக்கும்.

உயர்ந்த கருத்துகளை ஈர்க்கக் கூடிய சக்தி கிடைக்கும்.

நம்மை அறியாமலேயே உள் உணர்வில் ஏதாவது ஒரு கருத்தும், அதனின் ஆழமும் நம் அறிவுக்கு எட்டும்.

ஆக, இயறகையின் இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நமக்கு இயற்கையால் வழங்கப்படும்.

எப்படி என்றால், நம்முடைய ஈர்ப்பு சக்தி இருக்கிறது, நாம் கொடுத்த சங்கல்பத்திற்கு ஏற்றவாறு எனென்ன கருத்துக்கள் வேண்டுமோ அவை அனைத்தையும் ஈர்த்துக்கொள்ள முடியும்

Share