கடன்தொல்லை தீர எளிய வழிமுறைகள்

கடன்தொல்லை தீர எளிய வழிமுறைகள்

கடன்_தொல்லை_தீர_எளிய வழிமுறைகள்:

அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றினால் படிப்படியாக கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கடன் தொல்லை தீர எளிய பரிகாரம்
கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

1. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.

2. செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்சனை நீங்கும்.

3. ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

4. அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்.

5. குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்.

6. கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்.

7. மரணயோகம் உள்ள நாட்களிள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

8. தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்

Share