கண்(மை) அல்லது அஞ்சனம்

கண்(மை) அல்லது அஞ்சனம்

****கண்மை-சொல்ல மறந்த கதை****

கண்(மை) அல்லது அஞ்சனம்

கண்மை என்பது கண்ணுக்கு இடும் மையை குறிக்கிறது. ஆனால் தென்னிந்தியா பொருத்த வரை
அஞ்சன மை என்பது பெரும்பாலும் மாந்தீர சொல்லாகவே கருதப்படுகிறது(மாய் மை, வசிய மை ,யோக மை,ஞான மை,யச்சினி மை, ).போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல்( ஆறு வகை கற்கள் உள்ளன) குறித்த குறிப்புகள் காணலாம்.

சித்த மருத்துவத்தில் குழிப்புண், சன்னி, மேகம், நாவறட்சி, கண்வலி, இரத்தப் பித்தம் போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகப் இந்த அஞ்சனக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர மாந்திரீக, வசிய முறைகளில் மை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.பழந்தமிழ் பெண்கள் இந்த அஞ்சனக் கல்லில் சில மூலிகை அரைத்து புருவத்திலும், இமைகளிலும் மையாக தீட்டிக்கொண்டார்கள் என சங்க நூல்கள் கூறுகின்றன.

சரி கண்ணுக்கு இடும் மை பற்றி பேச வருவோம்..

உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள்… உடல்நலமின்மையையும் சரி, உள்ளம் சரியில்லாததையும் சரி… கண்கள் எதிராளிக்குக் காட்டிக் கொடுத்து விடும்.
அதே போல ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் பிரயத்தனப் பட வேண்டாம். கண்களுக்கு மை தீட்டினாலே போதும்.

கண்மை எனப்படுவது கண்கள் வசீகரமான தோற்றமளிக்க கண் இமைகளில் தீட்டப்படும் ஒப்பனைப்பொருள் மட்டும் அல்ல அது ஆரோக்கியத்திற்காக மையும் கூட..

மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண் மையிடுதல் வேண்டும் என சித்தர் நூல்கள் கூறுகின்றன.கண்மை யிடும் பழக்கம் அக்காலத்தில் ஆண்களுக்கும் இருந்தது.பெண்கள் மாதவிடாய் காலத்தில் கண்மை இடக்கூடாது.

கண்மை செய்வது வளர்பிறை அடுத்து வரும் சப்தமி திதியில் செய்ய வேண்டும்.மை கூட்டுவதில் பல வகைகள் உண்டு.அதில் ஒரு வகை தான் கிழே கூறப்பட்டிருப்பது.பருத்தி ( செம்பருத்தி)
பஞ்சில் திரி செய்து அதை பலமுறை கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து, ஒரு அகல் மாக்கல் விளக்கில் விளக்கெண்ணெய் (சிட்டாமணுக்கு) விட்டு அதில் காய்ந்த திரிகளைப் போட்டு எரிய விட வேண்டும் அதை புதிதான மண் சட்டியால்(சட்டியின் உற்புறத்தில் சோற்றுக்கற்றாலை பூச பட வேண்டும்) பாதியாக மூட வேண்டும். திரி எரிந்து மூடியுள்ள சட்டியில் கருப்பான பவுடர் மாதிரிப் புகை படியும். அத்துடன் கொஞ்சம் விளக்கெண்ணெய் அல்லது வெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம்.இதனை பெண்கள் நெற்றியில் பொட்டாகவும் பயன்படுத்தலாம்.

புருவங்களுக்கும் இந்த மையை தடவுவதால் கண்களுக்கு மேலும் அழகூட்டும்.பெண்களின் விழிகளே ஆயிரம் கதை பேசும் என்பர். அத்தகைய விழிகளை அழகாகக் காட்டும் புருவங்களுக்கும் மை இடுவது ஒன்றும் தவறில்லை.UB2,GB14,B2,TW23,GB1 போன்ற அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கிறது.இங்கு மையிடுவதால் பல உள் உறுப்புகள் புத்துணர்வு அடைகிறது.

வட மாநிலங்களில் சுர்மாப் பொடிகளில் கற்பூரம் கலந்ததும் ரோஜா கலந்ததும் கண்மை தயாரிப்பார்கள்.

கி.மு.3000 காலக் கட்டத்தில்
எகிப்து, கிரேக்கம், ஆஃப்ரிகா, அரேபியா போன்ற பகுதிகளில் சில ஆயிரம் வருடங்களுக்கு முந்திய சமூகங்களில் இருபொருட்கள் கண்-மையாகப் பயன்படுத்தப்பட்டன அவை மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு என்னும் பெயர் பூண்ட ஒரு வஸ்து இன்னொன்று ஸ்டிப்னைட் என்றும் ஆண்டிமொனைட்,லெட் சல்ஃபைடு. இதை அப்படியே பயன்படுத்த முடியாது இதை சிறந்த ரசவாதிகள் மட்டுமே சுத்தி செய்து மையாக்கும் நுட்பத்தை அறிந்திருந்தனர்.

கண்மை இடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மைகளில் சில..

1.கற்றாழை, கரிசாலை, விளக் கெண்ணையில் உள்ள நுட்பமான தாவர வேதிப் பொருட்கள் (Phyto chemicals) கண்மையில் கலந்திருக்கும். அவை மிகவும் நுண்ணிய துகள்களாக (Nano particles) கண்களின் இமைகளுக்கு உள்ளேயுள்ள நுண் இரத்தக் குழாய்கள் (Capillaries) வழியாக உறிஞ்சப்பட்டு ( உட்கிரகிக்கப்பட்டு ) மிகவும் நுட்பமான் முறையில் கண்களைப் பாதுகாக்கும். கண் விழித்திரையை (Retina) பலப்படுத்தும். கண் அசைவிற்கான தசைகளை சீராக இயங்கச் செய்யும். கண் எப்போதும் குளிர்ச்சியாகவும் நெயப்புத் தன்மையோடும் இருக்கச் செய்யும். கண் பார்வை நரம்புகளைப் பலப் படுத்தும்.

2 . நீரிழிவு நோய் (Diabetes), இரத்தக் கொதிப்பு (Hypertension) உள்ளவர்கள் வாரம் இருமுறை இரவில் மட்டும் போட்டு உறங்குவதால் பார்வை நரம்பு, விழித்திரை பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கண்புரை (Cataract) போன்ற பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் கண்களுக்குக் கிடைக்கும்.

3. கண்மையிலுள்ள நுண் பொருட்கள் கண் இமையினால் உறிஞ்சப்பட்டு கண்களைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி அவை மூளைக்கும் சென்று மூளை நரம்பு வேதிப் பொருட்களின் (Neurotransmitters) செயல்பாடுகளையும் சீராக்குவதால் மன அமைதி, தெளிவான சிந்தனை, கனிவு, அன்பு போன்றவை ஏற்பட வழிவகுக்கின்றது.

5.கண்ணில் போடும் கலிக்க (மை) மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.

அக்குபஞ்சரில் சோடா புட்டிக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உள்ள நபரை (லிவர் மேன்)ஈரல் குறைபாடுள்ள மனிதன் என்பார்கள்.இப்போது புரிகிறதா கண்ணுக்கும் ஈரலுக்கும் உள்ள தொடர்பு?????

இது போன்ற ஏராளமான விஷயங்களை சொல்லிக்கொண்டை போகலாம்.(குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை தன்னை வெளியுலகிற்கு காட்டிக்கொள்வதும் இல்லை).

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து என்கிறது திருக்குறள். இதன் விளக்கம்..என் கண்ணுக்குள் என் காதலன் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் நான் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன் என்பதாம்..

அந்தக் காலத்தில் தாயார் தன் குழந்தைக்கு ‘காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா’.. குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டுவா’ என்று பாட, குழந்தை தன் பொக்கை வாயைக் காட்டி சிரிக்க ஆசையுடன் மடியில் இருக்கும் குழந்தையின் கண்ணில் மை இட்டு நெற்றியிலும் ஒரு திலகம் மகிழ்வது வழக்கம்.

ஒரு திரைப்பட பாடல் ஞாபகத்திற்கு வருகிறது; காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே…..
கண்மை ஏந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்….

நான் ரசித்த கவிதை…
பெண்ணே, என்னை கொல்வதற்கு விழிகளே போதுமே, பின் அதில் ஏன் விஷம் வேறு தடவுகிறாய்…கண்மை

கரு மையை கொண்டு கவி தீட்ட முடியும் என உணர்ந்தேன் உன் கண் மையை பார்த்த பின்புதான்..

கண்ணுக்கு மை தீட்டக்
கோல் எடுக்கிறாள்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?”

அவளின் கருவிழிகள்
இரு கவிதைகள்
அதற்கு
அவளே வரைகிறாள்
மையால் உரை

செயற்கை ஐ லைனெரை தூர வீசிவிட்டு கண்ணிற்கு மை எழுதுவோமா? என்ன நான் சொல்வது சரிதானே..??

எனக்கு தெரியாத சில சூட்சமங்கள் உங்கள் தெரிந்திருந்தால் தெரியப்படுத்துங்கள்..நன்றி

Share