சத்துரு மாரணம்-அகத்தியர் பாடல்

சத்துரு மாரணம்-அகத்தியர் பாடல்

செயமாகச் சத்துரு மாரணத்தை கேளு

செப்புகிறேன் யவசிவய வென்று மாறு
பயமாகிச் சத்துருவும் மயங்கிப் போவான்

பஞ்சதனிற் அக்கினிபோல் பற்றும் பற்றும்
நயமாக மாறி நிற்பதாரை யென்றால்
நல்லோரை தூஷணிப்போர் நன்மையில்லோர்
மயமான சீவசெந்தை அழித்தோர் தன்னை
மாரணிப்பாய் புலத்தியனே மனதிற்காணே.

-அமுத கலைஞானம்

விளக்கம்:
எதிரி மாரணதை சொல்கிறேன் கேள்,முதலில் “யவசிவய” என்னும்
இம்மந்திரத்தை 1008 உரு செபித்து சித்திசெய்து கொள்ளவும்.பின்னர் தேவை ஏற்படும் போது உன் மூச்சை நன்றாக இழுத்தடக்கி எதிரியை பார்த்துஇம்மந்திரத்தை மனதால் செபித்தால் சத்துரு மயங்கிப் போவான். பஞ்சில் தீ பற்றுவது போல் இம்மந்திரத்தின் ஆற்றல் அவனை மாரணித்து விடும்.இம்மந்திரத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை அவமதிப்பவர்கள், தீயோர்கள், உயிர்களை அழித்த பாவிகளிடம் பிரயோகிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

#சிவசித்தர் #shivasiddhar http://shivasiddhar.org

Share