சித்தர்களின் மெய்தீண்டாகலை என்னும் அபூர்வ பிராணசிகிச்சை

சித்தர்களின் மெய்தீண்டாகலை என்னும் அபூர்வ பிராணசிகிச்சை

சித்தர்களின் மெய்தீண்டாகலை என்னும் அபூர்வ பிராணசிகிச்சை
*********************************************

இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல
ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.

பிராணசிகிச்சை
******************

இந்த அதிசய விசை பிராணா என்பது என்ன? அது எவ்வாறு பல அதிசயங்களைச் செய்கின்றது? பல ஆயிரம் வருடங்களாக இது உலகளாவி உபயோகத்திலிருந்த போதும், நாம் தற்போது மட்டுமே இது பற்றிக் கேள்விப்படுகிறோம்; அதன் காரணம் என்ன? இது ஒரு விஞ்ஞான முறையா? இதனால் எதாவது பக்க விளைவுகள் உண்டா? இதனைப் பயில்வதற்கு எமக்கு எதாவது தனித்திறமை அல்லது வல்லமை வேண்டுமா? இதனை முறைப்படி பயில எவ்வளவு காலம் தேவை? எத்தகைய நோய்களை அல்லது தீராத வியாதிகளைத் தீர்க்க இது உதவலாம்? இவற்றிற்கான பதில்களை பின்வரும் அத்தியாயங்களில் நாம் பார்க்கலாம். இதன் ஆரம்பம் அல்லது அடி, யோகப்பயிற்சி வழி வந்ததே! Dr. Dand Frawly, தனது நூலில், கடவுள், யோகிகள், அரசர்கள் என்ற நூலில் இந்தியாவின் கலாச்சாரமே உலகில் பழமையானதாகலாம் என்று கூறுவதுடன், கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே எவ்வாறு பிராணாவை, போர்க்களங்களிலும், தியான நிலைகளிலும், சிகிச்சையின் போதும் பாவித்தார்கள் என்றும் விரிவாகக் கூறுகின்றார்.

பல ஆயிரம் வருடங்களாகக் கடைப்பிடித்த முறைகளாகும். இம்முறைகள் சாதகமாக நல்ல பெறுபேறுகளைக் கொடுத்தால் தான் இன்றும் இந்தச் சிகிச்சை முறை நின்று பயன் தருகின்றது. சக்திமுறை வைத்தியமுறையில் பல விதம் இருந்தாலும், சில தனித்தன்மையான நன்மைகள் அல்லது பலன்கள் யோகா பிராணா சிகிச்சைக்கு மட்டுமே உண்டு

ஆன்மிகம் என்பது ஒன்றும் பெரிதல்ல. இது நிய மனதின் (pure consciousness) விளையாட்டை உணர்ந்து கொள்வதுதான். அதாவது எமது தவறுகள் பற்றியதை அறிந்துக் கொள்வதற்காக அதன் தோற்றநிலை அல்லது உற்பத்தியை அறிந்துக் கொள்வதேயாகும், அல்லது தேடிக் கண்டுப்பிடிப்பதேயாகும் – ஸ்ரீ நிசங்கதாத்தா மகாராஜ்.

பிராணா எல்லா உறுப்புகளிலும் (organs) உறைந்து, உடலின் எல்லாப்பாகங்களையும் ஒருமைப்படுத்துகின்றது பிராணா என்பது பிரபஞ்சத்தை படைப்பதாகவும், காப்பதாகவும், அளிப்பதாகவும், போற்றி வணங்கப்படுகின்றது. பிராணாவே சூரியனாகவும், மழையாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், உலகம் முழுவதையும், சொர்க்கத்தையும், நரகத்தையும் கட்டுபடுத்தும் விசையாக விளங்குகின்றது. பிராணாவே எல்லாவற்றையும் ஆளும் தோற்றமாகவும், எல்லா உயிர்களுக்கும் கடவுளாகவும் உள்ளது.

பிரணாவே பிரபஞ்சத்தின் வலிய சக்தியாகும். எல்லா ஜீவராசிகளும், இதனாலேயே வாழ்கின்றன. வேறுப்பட்ட மார்க்கங்கள் அல்லது நல்வழிமுறைகள் பிராணாவிற்கு வேறுபட்ட பல பெயர்களை வழங்கியுள்ளன. உயிர்ச்சக்தி, கை (Ki), ஒர்கோன் (orgone) மேலும் சக்தி (energy) என்று பல பெயர்கள். பிராணாவானது கூடுதலாக சுவாசத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது சுவாசமல்ல. பிராணாவானது சுவாசத்தில் நடைபயில்கிறது (rides on the breadth). ஆனால் அதிலிருந்தும் வேறுபட்டது. பிராணாவானது,

சுவாசத்தின்போது உடலினுள்ளும் வெளியிலும் செல்கின்றது.
பிராணா என்பது ஒரு சமஸ்கிருத பெயராகும். இதன் அர்த்தம், ‘பிரா’ (pra) என்பது முன்னம் என்பதையும், ‘ணா’ (na) என்பது சுவாசத்தையும் குறிக்கின்றது. இது ஒரு தூய சக்தியாகும். இதற்கென ஒரு தனித் தன்மையுமில்லை. இது தனது தூய தனித் தன்மையை இழக்காது. எத்தகைய தன்மைகளையும் (qualities) எடுக்க வல்லது. இது நாம் எவ்வாறு ஒரு தனிமனிதனாக இருந்து கொண்டு,

உடல் அணிகலன்களை அணிவதால் அதற்குரிய தோற்றத்துடன் (style) திகழ்கிறோமோ அது போன்றது.
இந்த பிராணாவானது, தியானத்தை மேற்கொள்வதற்கு உடலுறவு அல்லது பிராண சிகிச்சையை (healing) செயற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இது உடலிற்கு சக்தி ஊட்டுவதற்கும், சிந்தனை செய்வதற்கும் உரிய எண்ணச்சக்தியை அளிப்பதற்கும் மனிதனுக்கு உதவுகின்றது.

மனதில் உருவாகும் எண்ணத்தின் அசைவுகள், பிராணாவின் அசைவாலேயே உருவாகின்றன. பிராணாவின் அசைவானது, மனப்பிரதிபலிப்பின் எண்ண அசைவுளே!. இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்த சுழற்சி (வட்டம்) போன்று தோன்றுகின்றன.

ஏன் முழுமையான விஞ்ஞானம் ஒன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே, பிராணாவின் விளைவுகளைக் கொண்டு உருவாகியுள்ளது.

யோகமுறையானது, ஐந்து விதமான பிராண சக்தி எமது உடலில் இருப்பதாக கூறுகின்றது. அவையாவன பிராணா (Prana), அபண (Apana), சமண (Samana), உதன (Udana), அத்துடன் வயனா (Vyana) ஆகும்.

இது ஐந்து பிராணாக்களிலும், பிராணாவும் அபனாவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. பிராணாவானது இதயத்திலும், சிரசிலும் இருக்கையில், அபனாவானது முதுகு எலும்பின் (spine) அடிப்பாகத்தில் அமர்ந்துள்ளது. பொதுவாக பிராணாவும், அபனாவும் சுவாசத்தின் இரு துருவங்களாகும். பிராணாவானது சூரிய குடும்ப (solar) இயல்பையும் (அதாவது ஆண் தன்மையையும்), அபனாவானது சந்திரனின் (moon) இயல்பையும் (பெண்மைத்தன்மை) கொண்டுள்ளது.

பிராண சிகிச்சை முறையென்பது ஓர் வேதகால அணுகுமுறையாகும். இது மீள்சக்தியூட்டதை மனிதனின் முழு உடலுக்கும் வழங்குகின்றது. அதாவது உடல், மனம், உணர்வு இதனால் பயனடைகின்றன.
உண்மையில் இச்சிகிச்சை முறை உருவாக்கப்பட்ட நோய்களுக்கு மட்டும் தீர்வாக உதவுவது அல்ல.

அதன் மூலப்பிரச்சனைக்கு (fundamental issue) ஒரு நிரந்தரத்தீர்வாக, மிகவும் பயன்தரக்கூடியதாக அமைவதே பிராணசக்தி சிகிச்சையின் சிறப்புத்தன்மையாகும்.

பிராணாயாம விதிமுறைகள்
*******************************

1. காலம் : அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரம், உணவுஉண்டு4 மணிநேரம் கழிந்து இருக்கவேண்டும். பிராணாயாமம் முடித்து 1/2 மணி நேரம் சென்றபின்தான் சாப்பிடவோ, நீர் அருந்தவோ வேண்டும்.

2. இடம் : தூய, அமைதியான, நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும் திறந்தவெளியில் பிராணாயாமம் செய்யக்கூடாது. வெறுந்தரையில் அமரக்கூடாது, தரை விரிப்பின் மீது அமர்ந்துதான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யும்போது மின்விசிறியை நிறுத்திவிடவேண்டும். ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும்.

3. ஆடை : தூய்மையான பருத்தி ஆடை தளர்வானதாக இருக்க வேண்டும்.

4. வயது : 12 வயதிற்கு மேல் அனைவரும் பிராணாயாம் செய்யலாம்.

5. பெண்கள் : கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு நாடி சுத்தி மட்டும் செய்தல் நலம். பிறகு குரு ஆலோசனைபடி நடக்கவும். மாதவிடாய் நாட்களில் பிராணாயாமம் தவிர்க்கவும்.

6. இதயநோய் உள்ளவர்கள் குரு உதவியுடன் நாடிசுத்தி தவிர வேறெதுவும் செய்யக்கூடாது.

7. உணவு : சத்தான சாத்வீக உணவு (சைவம்), ஏற்றது பிராணாயமம் ஆரம்பிக்கும் முன் 1/2 டம்லர் நீர்பருகலாம், முடித்தபின்பு 1/2 மணி நேரம் சென்ற பின் நீர் பானங்கள் பருகலாம்.

8. பார்வை : கண்களை முடியே பிராணாயமம் செய்வது நலம்.

9. மனம் : பயிற்சியின் போது மனதை ஒருநிலைப்படுத்தி பின் பிராணாயாமம் செய்தால் முழுப்பலன்கிட்டும்.

10. உடலைத் தயார் படுத்துதல் : பிராணாயாமம் செய்யும் முன்பு இடதுகையை சற்று மேல்தூக்கி முன்பக்கமாக ஏற்றி பின் கீழே இறக்கி இயல்பு நிலைக்கு வந்து ஆரம்பிக்கவேண்டும். இது இருதயத்திற்கும், முளைக்கும் நாம்கொடுக்கும் சமிக்சை (சிக்னல்) ஆகும்.

11. திசைகள் : காலையில் கிழக்கு முகாமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.30 வரை வடக்கு முகமாகவும் செய்தல் நன்று. தென் திசை பிராணாயமம் செய்ய ஏற்ற திசை அல்ல.

12. நேரம் : அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை செய்வது உத்தமம், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை செய்வது உத்தமம்.

13. திதி நாட்கள் : அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடு இரவில் வடக்குமுகம் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். (நடு இரவு 12 மணி முதல் 1.30 மணி வரை)
கிரகண நாட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல ஓசோன் 03. ஆக்ஸிஜன் காற்று நிறைந்துள்ள நேரங்களை அறிந்து அந்நேரம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.

தெரிந்துகொள்ளுங்கள் பஞ்சபூத உறுப்புகள்.
*********************************************

1. இருதயம்
2. நுரையீரல்
3. மண்ணீரல்
4. கல்லீரல்
5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.

சித்தர்கள் கூற்று – பாடல்களுடன்
ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமத்தால்
ஆறுதல் கும்பகம் ஆறுபத்துநாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதில் ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே – திருமந்திரம்

பிராணன் என்ற காந்தக் கலவையின் கூட்டே காற்று என்ற மூலகம். இது பஞ்ச பூதங்களில் ஒன்று எனக்கண்டோம். இதனை ஒளவை பாடலில் “நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்று உலவை இரண்டு, ஒன்று விண்” – என கூறியுள்ளார். உலவை என்பது காற்று, இரண்டு அணுச்செல்களால்லான பூதத் தத்துவம் காற்று என திறம்பட இயம்பியுள்ளார்.

1. பஞ்சபூதங்கள் : விண், காற்று, தீ, நீர், நிலம்.
2. ஆறுசுவைகள் : இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு
3. மூன்று தத்துவங்கள் : வாதம், பித்தம், சிலேத்துமம்
4. உடலின் ராஜ உறுப்புகள்: 1.இருதயம்,2.நுரையீரல்கள், 3. கல்லீரல், 4. மண்ணீரல்,5. சிறு நீரகங்கள்
5. சுவாச உறுப்புகள் : புறஉறுப்பு மூக்கு, அக உறப்பு நுரையிரல்கள்
6. பிராணனின் வெறுபெயர்கள்: 1 காற்று (வெளியில்), 2. மூச்சு (அ) சுவாசக்காற்று 3. வளி, 4. நாடி, 5. வாசி, 6. வாயு, 7. வர்மம் 8. உலவை
எனப்பல பெயர்களில் சித்தர்கள் தம் பரிபாசையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்று பிராணன்கள்
***********************

1. மூலாதார பிராணன் சக்தி = முதாதையர் சக்தி
இதை பராமரிக்கும் உறுப்புகள் சிறுநீரகங்கள்.
2. உணவின் மூலம் கிட்டும் பிராணசக்தி.
இதை பராமரிக்கும் உறுப்பு மண்ணீரல்.
3. காற்றின் மூலம் கிடைக்கும் பிராணசக்தி
இதை பராமரிக்கும் உறுப்பு நுரையீரல்கள்.

மனித உடலின் பல்வேறு கவசங்கள் (Layers)
**********************************************

தன்னை புரிந்துகொள்ளும் புரிந்துணர்வு என்பது உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், ஒருவர் தமது உடலில் பற்று வைத்து, இந்த உடல் தான் தன் தன்மை என்றும், இந்த உலகமானது தன்னைவிட்டு மற்றொன்று என்றும் பிழையாக கருதுகிறார் என்று ஸ்ரீரமண கீதா சொல்கிறது.
ஒரேயொரு மனித உடல் பல உடற் கவசங்களாக (layers), பல வடிவங்களில் வேறுபட்ட அலைவரிசையில் அதிர்ந்த வண்ணம் உள்ளது. மிகவும் உயர்ந்த அதிர்வுக்கவசங்கள் (படிவங்கள்) , குறைந்த அதிர்வுக்கவசங்களில் தாக்கத்தை உருவாக்கி இறுதியில் மிகக் குறைந்த அதிர்வுகளாக உடலை அடைகின்றது. முதலாவது உருவம் அல்லது தோற்றம் உடலாகும். இரண்டாவது உயிர்ச்சக்தி (ethene) அல்லது சக்திமயமானது. மூன்றாவது உணர்வு (emotion) சம்பந்தமானது (astral body). நான்காவது மனம் சம்பந்தப்பட்டது (mental). ஐந்தாவது, ஆன்மிகம் அல்லது நுண் அறிவு சம்பந்தமானது, ஆறாவது பிரபஞ்சமான தூய பரந்த அறிவு (pure intellectual) மயப்பட்டது. ஏழாவது பெயர் குறிப்பிடமுடியாத, பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. இந்த ஆறு உடல் கவசங்கள் அல்லது உருவ உறைகளுக்கும் காரணமானது இறை சக்தி அல்லது இயற்கைச்ஷக்தி.

ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

மூலாதாரம்

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.
சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

ஸ்வாதிஷ்டானம்

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.
தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.
பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

எவ்வாறு பிராண சக்தி சிகிச்சை தொழிற்படுகின்றது
************************************************************

பிராணா சிகிச்சை முறை, சக்தியூட்டல் (energetic) வைத்தியம் என்று சொல்லப்படுகின்றது. வருத்தங்கள், நோய்கள், உடலின் எதிறிக் (ethiric) கவசத்தில் உள்ள நாடிகளில்தான் உருவாகின்றன. இவையே, நோவாகாவும், மன அழுத்தங்களாகவும் உருவாகிப்பின் நோயை உடலில் உருவாக்குகின்றன. இந்த பிராணவாயு சிகிச்சையைச் செய்பவர் இத்தகைய நோவுகளையும், மன அழுத்தங்களையும், வருத்தங்களையும், இரண்டாவது உடல் கவசமான எதிறிக் (ethiric) படிவத்தில் சுத்தமாக்கி (cleansing), பின் அதனை மீள் சக்தியூட்டுவதனால் (re-charging) முற்றாக நீக்கலாம். மேற்குறிப்பிட்ட நோய்கள் பெரும்பாலும் உணர்வு சம்பந்தப்பட்டவை ஆகும். ஆதலால் முதல் இரண்டு படிவங்களை அஸ்ரல் (astral), எதிறிக் (ethiric) என்பன கவனிக்கப்படவேண்டியவை. இதேபோல் மனம் (mental) சம்பந்தப்பட்ட குறைகளும், பிராண வைத்தியங்களால் ஒரு குறிப்பிட்ட காலச் சிகிச்சைக்குப்பின் அதன் தொடர்பான எல்லா உடல் கவசங்களுக்கும் தேவைப்பட்ட அளவில், பிராண சிகிச்சை செய்வதின் மூலம் முற்றாக நோய் நீங்க வாய்ப்பு உண்டு.
இந்த சிகிச்சை உடலில் (physical body) தேவையான நல்ல ஆரோக்கிய மாற்றத்தை அல்லது நிவாரணத்தை உண்டாக்க, ஓரளவு நேர இடைவெளியும், தகுந்த சிகிச்சையும் தேவைப்படும்.
உயிர்ச்சக்தி படிவம் தான் எமது தேகத்தின் முதல் கவசம் அல்லது உறை ஆகும். இங்கு தான் பிராணா நேரடியாகத் தொழிற்படுகின்றது. இதுதான் பிராணாவை உறிஞ்சிக்கொள்வதும், உடலின் எல்லா பாகங்களுக்கும் விநியோகிப்பதும் ஆகும். உயிர்ச்சக்தி உடல் கலசம் தான் எமது உண்மையான உயிர்ப்பாகும் (vitality). இதுவே பிராணா சிகிச்சைக்கு முற்றும் தேவையானது. இந்த உயிர்ச்சக்தி உடல் நாடிகளாலும், சக்கரங்களாலும் (chakaras) வழி நடத்தப்படுகின்றது. இந்த நாடிகளும், சக்கரங்களும், எதுவித அடைப்புக்களுக்கு உட்பட்டால், அதனால் உயிரின் சமநிலை குலைந்து நோய்கள் உருவாக காரணமாகலாம்.
உடலானது ஒரு சிக்கலான அமைப்பனதால், மேற்கூறிய குழப்பத்திற்கு உரிய அடிப்படை அல்லது மூல காரணத்தை அறிந்து கொள்வது பொதுவாகக் கடினமானதாகும்.
பிராணா சிகிச்சை முறை, உடல் சமநிலை குலைந்த அறிகுறியோ அல்லது முன்னேற்பாடோ இல்லாமல் ஆரம்பிக்கப்படுகின்றது. நோய்க் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது உறைவிடம், சிகிச்சைப் படிகளின் முதல் படியான கண்டுபிடித்தல் (detection) முறையாக எதிறிக் (ethiric) உடலை பரிசோதிப்பதின் (scanning) மூலமாகவே அறியப்படுகின்றது. உடலில் இப்பிரச்சனையுள்ள இடம், சுத்திகரிக்கப்பட்டு , பின் பிராணா மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இந்த சிகிச்சை முறையை மீண்டும் மீண்டும் செய்வதன்மூலம், பிராணா சிகிச்சை அக்குறிப்பிட்ட பகுதிக்கு அளிக்கப்பட்டு அப்பகுதி குணப்படுத்தப்படுகின்றது
இம்முறை எமது குடும்பத்தினருக்கு உண்டாகும் தடிமல், காய்ச்சல் (சுரம்), தலையிடி, தசைப்பிடிப்பு, உடல் உபாதை, சளி போன்ற பல தரப்பட்ட சாதாரண அன்றாட நோய்களுக்கும், நோவுகளுக்கும் நிவாரணமளிக்கும் எளியமுறையாகும். இது பல ஆபத்தான நோய்களையும், முறையான பயிற்சி முறையாலும் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட அருளினாலும் (grace), பிராணாவின் உதவியுடன் தீர்க்கவல்லது. இதற்கு ஒரு தனித்திறமையும் தேவையில்லை. ஒழுங்கான உரிய பயிற்சியை நாள்தோறும் சிலை மணி நேரம் செய்வதால் தாமாகவே நோய் நிவாரணம் பெற முடியும். அல்லது ஒரு தகுதியான பிராண சிகிசையாளரின் மூலம் அதன் சிகிச்சைப்பயனை பெறமுடியும்.
பிராணா ஓர் உயிர்ச்சக்தி என்று சொல்லப்படுகின்றது . ஏனெனில் இது பிரபஞ்சமாயமாக, எல்லா உயிரினங்களாலும், எல்லாக்காலங்களிலும் பெறக்கூடியதாக உள்ளது. பிராணா இயற்கை நிலையில் ஏற்றம் அற்றது (neutral); சமநிலையானது. ஆனால் இதனால் எத்தகைய தன்மைகளையும் ஏற்று அதனைக் கொண்டு செல்லக் கூடியது, எல்லாவித சடங்குகள், சம்பிரதாயங்கள், மூர்த்திகளினால் மனத் தில் ஏற்படும் தாக்கம் யாவும் பிராணாவே! பல்வேறு குணாதிசயங்களை, தன்மைகளை தன்னகத்தே கொண்ட மனநிலையே பிராணாவாகும். சடங்குகளில் நமக்குள்ள அசாத்தியமான நம்பிக்கை இந்தப் பிராணாவின் பிரயோக வலிமையைக் கூட்டுகின்றது. இது அந்தச்சடங்குகளின் வலிமையினால் அல்ல… அச்சடங்குகளின் மீது நாம் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையேயாகும்.
இந்த அனுபவமே, எல்லா வித கலாச்சார, சமய, மந்திரீக சிகிச்சை என்பன, மனதில் மிக விரைவாக பிராணாவின் ஓட்டத்தை அதிகரிக்கச்செய்வதேயல்லாமல், வேறு ஏதும் இரகசியமான சக்தியினால் அல்ல. பிராணாதான் இந்த அதிசய-யாருமறிந்த சக்தி; இதைத் தவிர வேறு எவ்வித சக்திகளும் உளம் நிவாரணம் பெறத் தேவையானவை அல்ல. எல்லாவித இயற்கை வைத்தியங்களும், பிராணாவையே உபயோகப்படுத்துகின்றன. இது இதனைச் செய்பவரில் தங்குவதில்லை. இந்த பிரணாவின் உயர்சக்தியை உணர்ந்து சிகிச்சையளித்தால் இதன் முயற்சிப் பலன் (effectiveness) பல மடங்கு அதிகமாகும். இதனைச் செய்பவர் ஒவ்வொரு பிரச்னையையும் (case) பிரத்தியேகமாக அணுகிச் சிகிச்சையளித்தால் (அதாவது ஒரு பொதுவான சிகிச்சை முறையை எல்லா பிரச்சனைகளுக்கும் கடைப்பிடிக்காது), அதனால் ஏற்படும் பலன் அதிகமாகும். இச்சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட உடற் பாகங்களிலுள்ள மேலதிகமான, தேவையற்ற பிராணாவை அகற்றி, சுத்தம் செய்து, மீள் பிராணா சக்தியூட்டி, வியாதியஸ்தரை புதிய தூய அன்புமயமான பிராணாவின் மூலம் குணப்படுத்தலாம். இச்சக்தி மூலமான குணப்படுத்துதல் இலகுவானது, சிக்கலற்றது. இதனால் எத்தகைய பக்கவிளைவுகளும், கெடுதல்களும் இல்லை. இம்முறை நேரானது, உண்மையானது; இறைத்தன்மை வாய்ந்தது. இதை வர்த்தகமுறைப் படுத்தி (business) வியாபாரமாக்குவதே விரும்பப்படாததாகும்.
இச்சிகிச்சை முறையை எவ்வாறு செய்வது.

பிராணசிகிச்சை
*********************

இச்சிகிச்சையளிக்குமுன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல் சிகிச்சையின்போது தெரிவித்தல் வேண்டும். இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும். சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.
முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும். இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும். அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும் பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும் நடைபெறுகிறது.

Share