சித்தர்கள் சன்னதியில் செத்தவனும் உயிர் பிழைப்பான்

சித்தர்கள் சன்னதியில் செத்தவனும் உயிர் பிழைப்பான்

சித்தர்கள் சன்னதியில் செத்தவனும் உயிர் பிழைப்பான்.
– அகத்தியர் வாக்கு.

சித்தர்கள் தங்களது குருவின் முன்னிலையிலோ அல்லது குருவின் அருளால் வாசி என்னும் மூச்சு பயிற்சியின் போது அவர்களின் ஜீவன் எதிர்பாராமல் lock ஆகிறது அதாவது சப்த நாடிகளும் அடங்கியது.

கபாலத்தில் மட்டும் ஓம் என்ற மந்திரம்
தொடா்ந்து உச்சரிக்கும் இங்குதான் அவர்கள்
குரு மகத்தான மந்திரம் ஒன்றை அவர்களின்
காதில் ஓதி நீங்கள் ஜீவசமாதி யாக இன்னும்
நாள் உள்ளது என்பார்கள். உடனே அவர்களின்
Lock release ஆகும். குருவின் மகிமை
புரிகிறதா. ஒருவன் இறந்த பிறகு அவனுக்கு 9 வழியாக உயிர் பிரிகிறது என்றும் மேலும்
அவணை புதைப்பதால் அவன் கபாலத்தில்
தனஞ்சயன் எனும் பிராண மண்டலங்களில் 3 நாட்கள் உயிரோடு இருக்கும் என்றும்
சித்தர்கள் அதை கொண்டு அந்த 9 பிராண
மண்டலங்களில் பிராணம் ஏற்றி உயிர்
கொடுப்பர் இப்படி சித்தர்களின்
சாகாக்கலையின் ஒரு கலை என்று தெரிகிறது.

சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல் இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம், சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும், 12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு
ஒருபோதும் விலகுவதில்லை; எனவே தான்
பிறந்த நட்சத்திரம், ராசி, லக்னத்துக்கேற்ற
ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்வது.

பழனிக்கு மாலை போட வேண்டும்
என்றோ, காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ
நினைத்தால், பழனியில் நிர்விகல்ப
சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள்
ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும்
சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால்தான் அவ்விடத்துக்குச் நீங்கள்செல்ல முடியும்.

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷவிடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால்விளங்கும்.

தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின்
பயனால் புத்திரதோஷம், திருமண தோஷம், தொழில் தடை, தகுதியிருந்தும் வாழ இயலாமை, ஐஸ்வர்யத் தடை, பிணி, நோய், விபத்துக்களால் அகால மரணம், கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும், வாழ்வியல் கலைகளாகிய யோகம், தியானம் போன்றன
அருமருந்தாகும்.

சித்தர்கள் கண்ட அருந்தவ யோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.

சித்தர்கள் சன்னதியில் செத்தவனும் உயிர்
பிழைப்பான் என்ற கூற்று உறுதியாகிறது
இப்போது புரிகிறதா சித்தர்களின் மகிமை..

மொத்தத்தில்….. ஒவ்வொரு சீவனும் சிவனே. இந்த சிவராத்திரி நாளிலாவது முடிந்தவர்கள் , அருகில் உள்ள ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடுகளை நடத்துங்கள் , தியானத்தில் ஈடுபடுங்கள்.

“சீவனென்ன சிவனென்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட் டிருப்பரே”.

சிந்தைய தென்ன சிவனென்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படுஞ்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவனிருந் தானன்றே

சிவனுக்கு மட்டுமல்ல, சீவர்கள் யாவருக்குமே நெற்றிக்கண் உண்டு. ஏனெனில் ஒவ்வொரு சீவனும் சிவனே.

– என்று திருமந்திரம் கூறுகிறது.

Share