சித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது காத்தது எப்படி?

சித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது காத்தது எப்படி?

சித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது காத்தது எப்படி?என்கிற மாபெரும் ரகசியத்தை என் குருநாதர் திருமூலர் திருமந்திரத்தில் ஆழமாக கூறியுள்ளார். அந்த யோக முறைகளின் சாரத்தை இன்று பார்ப்போம்…..*

*” மூல நாடி முகட்டறை உச்சியில்*
*நலுவாசல் நடுவுள் இருப்பீர்காள்*
*மேலை வாசல் வெளியுறக் கண்டபின்*
*காலன் வாசல் கனவிலும் இல்லையே . “*
– *திருமூலர்* –

மூல நாடி என்றால் சுழுமுனை. இது எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்கும் தலயாயது. இதன் முகட்டில் உள்ள அறை கபால உச்சியில் இருக்கும். அங்கே நான்கு அறிவுகளின் வாசல்கள் உண்டு. அவற்றின் நடுவாக அமைந்த மையத்தில் *மனம் ஒன்றி நிக்குமாயின்* சச்சிதானந்தப் பெருவெளியைக் காணலாம். அதைக் கண்ட பின்பு யமன் என்கின்ற பயம் இல்லவே இல்லை, *அதாவது இறப்பே இல்லை* என்கிறார் திருமூலர்.

நான்கு அறிவுகள் :- கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு.

குண்டலினி யோகத்தில் சுழுமுனை நாடி வழியே மூலக் கனலை மேல் நோக்கிச் செலுத்துகிற யோகிக்கு மூன்று மண்டலங்களும் ஒத்த வகையில் வளரும். அது வளர்ந்தபின் எடுத்த உடல் உலகம் இருக்கும் வரை சீவனை விட்டு நீங்காது என்கிறார் திருமூலர்.

*” கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்*
*தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு*
*மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்*
*பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே. “*
– *திருமந்திரம்*

முக்குணம் என்கின்ற இருள் நீங்க மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேலெழுப்பி, வலப் பக்கத்து சூரிய கலையை இடப்பக்கத்து சந்திர கலையுடன் பொருத்தி காலையில் ஒரு நாளிகை நேரம் பயின்றால் உடம்பில் உயிர் அழியாது இருக்க வைப்பன் சிவன், என்கிறார் திருமூலர்.

மும்மண்டலம் :- அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்.

முக்குணம் :- தாமசம், இராஜசம், சாத்வீகம்.

*ஆகவே சித்தர்கள் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தது இப்படித் தான் என்பது திருமூலர் வாக்கிலிருந்தே தெளிவாகிறது.*

குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று.

மனித சரிரத்தைத் தாங்கி நிற்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.

*குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே* சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனுபவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள்.

குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. குண்டலினி சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.

*யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள்.

Share