சிவசிந்தனை பாகம்-3

சிவசிந்தனை பாகம்-3

உருவமில்லாத பரம் பொருள் நம் சிந்தனைமை ஒருநிலைப்படுத்த தன்னை குறைத்து உருவம் அருவுருவம் எடுக்கிறார். அப்படி உள்ள இறைவனின் திருவுருவத்தை நாம் சிந்தையில் நிருத்தி தியானித்து வந்தால் நாளடைவில் அருவுருவமான தன் லிங்கரூபத்தை காண்பிப்பான். லிங்கரூபத்தை தொடர்ந்து தாயானிக்க தன் அருவத்தையும் இறைவன் காட்டி அருள் புறிவார்.

உருவத்தில் கட்டப்பட்ட உயிர்கள் நான் நிற்குணப்பிரம்மத்தை தான் வழிபடுவேன் என்று சொன்னால் அது வேலையில்லாதவன் செய்வது என்று வைத்துக்கொள்ளலாம்.நிச்சயமாக நம்மால் நிற்குணப்பிரம்மத்தை தியானிக்க இயலாது. எண்ண ஓட்டங்கள் சிதரும். ஐம்புலன்களும் நம்மை தன் வழிக்கு இழுக்கும். பிறகு தியானம் செய்கிறேன் என்று அமர்ந்த அத்தனை நேரமும் வீணாகி விடும்.

நீங்களே யோசித்து பாருங்கள். நிர்குணபிரம்மத்திற்கு நான் உணவு படைத்து பூ இட்டு பாமாலை பாடி வழிபடுவேன் என்றால் அது இயலுமா. அதில் மனம் ஒடுங்கமா. ???

இறைவனே நம் நிலை அறிந்து நமக்காக இறங்கி வரும் போது நான் உன் சுயரூபமான அந்த நிலையைத்தான் காட்பேன் என்று கூறி முயர்ச்சித்தல் அவன் சங்கல்ப்பத்திள்கு மாறானது.

அவன் சங்கல்பத்திற்கு மாறாக எதும் நமக்கு சத்தியமாகாது.

நேரத்தைக் கடத்தலாமே ஒழிய அதில் பயனில்லை.

நம் தாய் தந்தை கூட நாம் படிப்பில் முதல் பரீட்சையிலே 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். ஆனால் நம் இறைவனோ நம்மை நன்று அறிந்து அவன் நம் நிலைக்கு இறங்கி வரும் போது நாம் வழி தவறுதல் தகுமோ.

இறைவன் எனும் பர்பொருளின் இயல்புகளை அதன் கோடி கோடியில் ஒரு துளியை எழுதி இத்துடன் முடிக்கிறேன்.

ஐந்து பொருட்களின் இயல்புகளையும் நாம் பார்த்து விட்டோம்.

இவற்றை எத்துனை பேர் படித்தீர்கள் என தெரியவில்லை.

தொடரும்.

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

Share