சிவசிந்தனை பாகம்-3

சிவசிந்தனை பாகம்-3

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்.

இன்று முதல் ஓரிரு நாட்களுக்கு சைவம் கூறும் முக்திக்கான படிமுறைகள் விவரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

முக்தி அடைய, மற்ற பல வழிபாட்டினரும் பல பல வழிகளை கூற… சைவம் கூறுவது நான்கு படிமுறைகள்.

அவை

சரியை ( தாசமார்கம்)
கிரியை (சற்புத்திர மார்கம்)
யோகம் ( சக மார்கம்)
ஞானம் ( சன்மார்கம்)

மிக முக்கியம் இவை நான்கும் படி முறைகளே.

பிற வழிபாடுகளில் பக்தி வந்தால் தான் ஞானம் என்றும் ஞானம் வந்தால் தான் பக்தி என்றும் கூறும் வேளையில் சைவமோ பக்தி ஒரு புதிய நிலை அல்ல அது இந்த நான்கிலும் இருக்க வேண்டியது என்று வரையறுத்துக் காட்டுகிறது.
அதாவது.

பக்தி என்றால் இன்று எனக்கு திடீரென்று பக்தி வந்து விட்டது என்று அல்ல. உடனே ஞானம் வந்துவிடும் என்றும் அல்ல.

பக்தி என்பது எப்போதுமே உள்ள நிலை.

சரியையிலும் பக்தி வேண்டும் கிரியையிலும் பக்தி வேண்டும் யோகத்திலும் பக்தி வேண்டும் ஞானத்திலும் பக்தி வேண்டும் என்று பக்தியை இப்படி பிரித்து நமக்கு வரையறுக்கிறது நமது சைவம்.

ஆகையால் நம் சைவம் பக்தி என்னும் வார்தை உபயோகிக்காது.

சரி அப்பொ சரியை க்கும் முந்திய நிலையில் உள்ளவர்களை சைவம் தண்டிக்கிறதா என்றால் இல்லை. பிற வழிபாடுகள் எல்லாம் நாங்கள் கூறும் இறைவனை நீ ஏற்காவிட்டால் இறைவன் உன்னை தண்டிப்பான். அவருக்கு நீ பயப்பட வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் நம் சைவம் அப்படி என்றுமே கூறவில்லை.

அதென்ன சரியைக்கு முந்திய நிலை. ???

அது.

உங்களுக்கெல்லாம் நேரம் போகவில்லை என்று சைவ சித்தாந்தம் கத்துக்குறீங்க.
வேலை இல்லாம கோயிலுக்கு போறீங்க.
என்று கூறும் மனிதர்களை தான் கூறுகிறேன்.

இவர்களை சைவம் சமயபிரச்ஞன் என்கிறது.

இவர்களுக்கு இறைவன் அருளவில்லையா என்றால் நிச்சயம் அருளுகிறார்.

அவர்கள் செய்த உலக புண்ணிய பாவங்களுக்கு தகுந்த மறு பிறவியை கொடுத்து பிறவிகளால் அனுபவத்தின் மூலம் இறை சிந்தனை வருமாறு செய்ய பல பல இடங்களில் பிறக்க வைக்கிறார். இப்படி பிறவிகளால் அனுபவப்பட்டு இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இறை வழிபாட்டை துவங்குபவர்கள் சரியையாளர்கள்.

சரி

இனி நம் வழிக்கு வருவோம்.

இந்த சரியை கிரியை யோகம் ஞானம் நான்கு படியாய் இருந்தாலும் அவை பதினாறாக விரிவுப்படுத்தி சைவம் கூறுகிறது.

அவை.

*சரியை*

1. சரியையில் சரியை
2. சரியையில் கிரியை
3. சரியையில் யோகம்
4. சரியையில் ஞானம்.

*கிரியை*

1. கிரியையில் சரியை
2. கிரியையில் கிரியை
3. கிரியையில் யோகம்
4. கிரியையில் ஞானம்

*யோகம்*

1. யோகத்தில் சரியை
2. யோகத்தில் கிரியை
3. யோகத்தில் யோகம்
4. யோகத்தில் ஞானம்

*ஞானம்*

1. ஞானத்தில் சரியை
2. ஞானத்தில் கிரியை
3. ஞானத்தில் யோகம்
4. ஞானத்தில் ஞானம்.

என்று பதினாறாக விரிவடைந்துள்ளது.

இன்றளவு இங்கே நிறுத்திக் கொண்டு நாளை விளக்கத்தை காண்போம்.

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Share