சிவசிந்தனை பாகம்-4

சிவசிந்தனை பாகம்-4

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

இறை வழிபாட்டில் ஏன் இப்படி வகுக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி நமக்கு இயல்பாக எழும்பும்.

இறைவனை மன மொழி மெய்களால் வழிபாடு செய்து அதன் மூலம் ஞானம் அடைதல் தானக நிகழ வேண்டும் என்பதால் தான் இதை வகுத்தனர் அருளாளர்கள்.

அதாவது உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் கையில் இருந்து ஒரு பொருள் தானாய் விழுவது போல உறங்குபவன் அறியாமல் விழுவது போல இந்த உயிர்களிடத்திலே உள்ள ஆணவ மலம் தானாக இந்த உயிரை விட்டு விலகி போய் உயிர் தூய்மை அடைந்தால் தான் அந்த உயிர் பரிபூரண ஆனந்தம் அடைய முடியும் என்பதால் தான்.

இவ்வாறு மன மொழி மெய்களால் இறை வழிபாடு செய்யும் போது இந்த மூன்றாலும் நாம் இறைவனையே சிந்திக்கிறோம். அப்போது உலகாயுதத்தில் ஏற்படுகின்ற கவர்சி நம்மை அண்டாது. மனதால் மட்டும் வழிபட்டால் இந்த உடல் ஒத்துழைக்காது. உடலால் வழிபட்டால் மனம் எங்கோ ஓடும். இரண்டாலும் வழிபட்டாலும் மொழியால் நாம் கண்ட வார்த்தைகளையும் பேசுவோம்.
இவை மூன்றாலும் நாம் செய்யும் வினைதான் நமக்கு வினைப்பயனாக வருகிறது. இவை மூன்றையும் இறைவன் மீது திருப்பவே இந்த நாற்பாதங்கள். இவை நான்கிற்கும் இறைவனது நான்கு நிலைகள் வழிபாட்டிற்கு உரியதாக உள்ளது. அவை அருவம், உருவம், அருவுருவம், அருவமும் கடந்த பரப்பிரம்மம்.

*சரியை*

சரியை என்றால் இறை வழிபாட்டில் நம்மை இணக்க துவங்கும் நிலை. மெய்யால் (உடலால்) வழிபடும் முறை சரியை.
திருக்கோயிலுக்கு செல்லுதல் நந்தவனம் அமைத்தல் திருக்கோயிலை சுத்தம் செய்தல் மெழுகுதல் திருப்பணி செய்தல் பாழடைந்த கோயில்களை புனரமைத்தல் அடியார்களுக்கு அமுதிடதல் தொண்டு செய்தல் ஆகியவை சரியை தொண்டுகள் எனப்படும்.

1. சரியையில் சரியை…
திருக்கோயிலுக்கு செல்லுதல் திருவிளக்கிடுதல் போன்ற மேற்கூறப்பட்டவை அனைத்தும்.

2. சரியையில் கிரியை

திருக்கொயிலில் ஒரு மூர்த்தியை மட்டும் தொடர்ந்து வழிபடுதல்.

3. சரியையில் யோகம்
அப்படி வழிபட்ட மூர்த்தியை தியானித்தல்.

4. சரியையில் ஞானம்.

மேற்கூறிய அனைத்திலும் உண்மையாக ஈடுபட்டு செய்திருந்தால் பெரும் அனுபவ அறிவு.

இந்த சரியையில் ஞானம் எனும் பாதம் கடந்தவர்கள் கிரியைதொண்டு செய்ய பக்குவமடைந்தவர்கள் ஆகிறார்கள். இங்கே சரியையாளர்கள் வழிபடுவது உருவ வழிபாடு.

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்.

Share