சிவசிந்தனை பாகம்-5

சிவசிந்தனை பாகம்-5

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

சரியை தொண்டினால் நமக்கு கிடைக்கும் ஞானம் என்ன என்பதை இன்று காணலாம்.

சரியை தொண்டில் நாம் செய்யும் தொண்டுகளை பார்த்தோம்.

இப்படி திருக்கோயிலுக்கு தினம் சென்று அபிஷேக ஆராதனைகளை காண்கிறோம் அல்லவா…

பல பல விதமான அபிஷேகங்கள் சோடச உபச்சாரங்கள் பஞ்சப்பிரம மந்திரங்கள் என்று சிவாச்சாரியார்களும் அந்தனர்களும் பூசிப்பதை தினம் கண்டு மனம் நெகிழ்கிறோம்.

இப்படி நெகிழும் நெஞ்சம் அந்த சரியையில் ஞானம் எனும் நிலையில் எண்ணுவது இதுவே.

இவர்கள் செய்ய கூடிய அனைத்து பூஜைகளும் நான் என் கையால் என் இறைவனுக்கு செய்ய வேண்டும். இறைவா உன்னை என் கைய்யால் பூஜிக்க முடியாதா.. உன்னை பூஜிக்கும் வாய்பை எனக்கு கொடு என்று இந்த உயிர் கண்ணீர் மல்கி நிச்சயம் கேட்டு விதும்பும்.

இந்த ஞானம் ஒரு பிறவியில் வாய்காது.

இந்த ஆணவ மலம் இருக்கிறதே இது நாம் ஒரு நல்ல காரியம் செய்ய பல பல தடையான கேள்விகளை எழுப்பி அந்த காரியத்தை செய்ய விடாமல் தடுக்கும்.

அப்படித்தான் சரியையில் நிற்பவர்கள் நினைபாபார்கள் நான் உலகாயுதத்தில் மிக வேகமாக ஓட வேண்டியுள்ளது அதனால் இப்படி பூஜை எல்லாம் தேவை இல்லை என்று கூறும்.
சூழ்நிலை சாதகம் இல்லை என்று ஒதுக்கி விடும்.
இது போன்ற பல பல கேள்விகள் கேட்டுக்கொண்டே எடுத்த பிறவியை வீணடிக்க செய்யும் இந்த ஆணவ மலம்.

ஆனால் ஒன்று…. இப்படி சரியை தொண்டை செய்பவர்கள் உண்மையாக இறைவனை எண்ணி வழிபடும் போது…

சிவ பெருமான் தான் என் உயிர்க்கடவுள் என்று எனக்கு தெரிந்து விட்டது. அவனை என் கையால் பூஜிக்க விறுப்பமும் உண்டு.. ஆனால் எனக்கு இந்த உலக வாழ்கை சாதகமாக இல்லையே என்று கண்ணீர் விடும் மனிதர்களை நாம் காணுவோம். நாம் பலரும் இவர்கள் தான். இவர்களை சைவம் *பொது சைவர்* என்று கூறுகிறது.

இவர்களை அடுத்ச பிறவியில் இந்த கிரியை தொண்டு செய்ய ஏதுவான குடும்பத்தில் பிறப்பிக்கும். அதற்கான சூழ் திலையை ஏற்படுத்தி தரும்.

அப்படி பிறப்பவர்கள் சிவ குலத்தில் பிறந்து சிறு வயது முதலே கிரியை தொண்டை தொடர்வார்கள்.

குறிப்பு

இந்த சரியை கிரியை யோகம் தான் ஞான சாதனமாக உள்ளது. இவைகளை தான் ஞானம் வந்தால் மட்டுமே முக்தி பேறு கிட்டும். இவைகளை *இறப்பில் தவம்* என்கிறது சைவம்.

அதாவது மற்ற எந்த வழிபாட்டு முறையும் பலனை அளித்து விட்டு அது முடிந்து விடும். ஆனால் இந்த மூன்றும் மட்டுமே இறவாத தவம் என்று கூறுகின்றனர்.

இதுதான் தவம் இந்த மூன்றினால் மட்டுமே ஞானம் வாய்கும் ஞானம் மட்டுமே முக்திக்கு வழி.
*ஞான துவாரா மோக்ஷம்* என்று வடமொழியில் கூறுவர்.

ஆக சரியை தொண்டு செய்பவர்கள் கிரியையை விறும்புங்கள் என கூறுகிறது சைவம்.

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Share