சிவசிந்தனை பாகம்-6

சிவசிந்தனை பாகம்-6

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

*கிரியை*

கிரியை என்றால் குருவிடம் தீக்ஷை பெற்றுக்கொண்டு உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வழிபடுதல்.

சரியையாளர்கள் வழிபடுவது உருவ வடிவும்.
இங்கு கிரியையாளர்கள் வழிபடுவது லிங்க வடிவம்.

இங்கே கவனிக்கவும்.

உருவத்தை வணங்கி வழிபட்டு வழிபட்டு தான் லிங்க வடிவத்திற்கான பக்குவம் ஆன்மாக்கு வருகிறது.

முதலில் தீக்ஷை என்றால் என்ன என்று காண்போம்.

தீன்+ க்ஷை= தீக்ஷை

தீன் என்றால் கொடுப்பது
க்ஷை என்றால் கெடுப்பது

தீக்ஷை என்றால் கெடுப்பதும் கொடுப்பதும் என்று பொருள்…

உயிரை பற்றியுள்ள மலத்தை கெடுப்பதும் முக்தியை கொடுப்பதும் என்று இந்த வார்த்தைக்கு சாத்திரம் பொருள் கூறுகிறது.

மேலும் தீக்ஷை என்றால் சிவ பெருமானை சிவாகமத்தில் விதித்தபடி மன மொழி மெய்களா

சரி தீக்ஷை ஏன் பெற வேண்டும் என பார்ப்போம்.

தீக்கஷை வகைகள் நான்கு. அவை.

*சமய தீக்ஷை*(சிவதீக்ஷை)
*விசேஷ தீக்ஷை*
*நிர்வாண தீக்ஷை*
*ஆச்சாரிய தீக்ஷை*

சமய தீக்ஷை பெற்றுக் கொண்டால் பஞ்சாக்கரம் ஓதும் அதிகாரம் கிடைக்கிறது.

இங்கு அதிகாரம் என்றால் பதவி என்று பொருள் அல்ல. உரிமை , தகுதி என பொருள். இந்த அதிகாரம் எதற்கு என்றால் கடமையை செய்ய தரப்படும் அதிகாரம். என்ன கடமை? ஒவ்வொரு தீக்ஷைக்கும் ஒவ்வொரு கடமை உண்டு.

பஞ்சாக்ஷரம் ஓதுவதற்கு எதற்கு அதிகாரம் என்றால்…

உங்களுக்கு தீக்ஷை அளிக்கும் குருவானவர் தன் குருவிடம் சமய தீக்ஷை பெற்றது முதல் ஆசாரியராகும் வரையும் பஞ்சாக்ஷரத்தை ஓதி வந்திருப்பார். அந்த குருவின் குரு அவரது குரு அவரது குரு என சங்கிலி தொடராய் வரும் குருக்கள் ஓதி ஓதி வந்த பஞ்சாக்ஷர பலன் இந்த தீக்ஷை மூலம் தான் நமக்கு கிடைக்க முடியும்.

இப்படி அளிக்கும் தீக்ஷை பல வழியில் வழங்குவார்கள் குருமார்கள்.

நயன தீக்ஷை
கர தீக்ஷை
பாத தீக்ஷை
மானச தீக்ஷை
யாக தீக்ஷை

என பல வழிகளில் நமக்கு அளிப்பார்கள்.

இப்படி நாம் வாங்கிக்கொள்ளும் தீக்ஷையில் நமக்கு கிடைக்கும் உரிமை பஞ்சாக்ஷரம் ஓதும் உரிமை. இதை பெற்று நாம் ஓதும் போது முன் குருமார்கள் ஓதிய பலனும் இணைந்து நம் உயிரை தூய்மை செய்யும்.

தீக்ஷை பெற்றவர்களை சாத்திரம் சிறப்பு சைவர் என அழைக்கிறது.

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

Share