சிவசிந்தனை பாகம்-7

சிவசிந்தனை பாகம்-7

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

சமய தீக்கை பற்றி பார்த்தோம். இதில் ஒரே ஒரு விஷயத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
சமய தீக்கையின் போது ஐந்தெழுத்தோடு மூல மந்திரம் பீஜ மந்திரம் என இணைத்து அளிப்பார்கள்.
இது அந்த அந்த ஆன்ம பக்குவத்தின் படி குரு மட்டுமே அளிக்க முடியும்.
முற்பிறப்பில் நாம் என்ன நிலையில் நின்றோம் என்பதை உண்மை குரு அறிவார்.

(உண்மை குரு)

சமயதீக்கை முடித்தப்பின் கூடுவிட்ட உயிருக்கு அடுத்த பிறவியில் ….. குருவாக உள்ளவர் நேரடியாக விசேட தீக்கை அளிப்பாரா என்பது என் கேள்வியுமாக உள்ளது. அல்ல முதலில் இருந்தே வர வேண்டுமா என்று பெரியோர்கள் பதிலளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இனி விசேஷ தீக்கை.

விசேஷ தீக்கை பெற்று கொண்டால் மந்திராதிகாரம் அர்ச்சனாதிகாரம் யோக அதிகாரம் எனும் மூன்று அதிகாரங்கள் பெறுவோம்.

மந்திராதிகாரம் முன்னமே சொன்னது போல குரு உபதேசித்த மந்திரம் ஓதுதல்.

அர்ச்சனாதிகாரம் என்றால் சிவ லிங்க திருமேனியை பூஜிக்கும் கடமையை செய்ய வழங்கப்படும் அதிகாரம்.

ஆலையங்களில் உள்ள பூஜை பரார்த்ச பூஜை எனப்படும். நாம் செய்கின்ற பூஜை ஆன்மார்த்த பூஜை எனப்படும்.

பரார்த்தம் என்றால் பரம் பொருளாய் அண்ட சராசரத்திலும் உள்ள பரம்பொருளின் சக்தியை மூர்த்தியின் மீது ஆவாஹனம் செய்து அந்த திருமேனியை வழிபடுதல். அது ஆலையங்களில் செய்வது.

ஆன்மார்த்த பூஜை என்றால் நம் உயிரிலே உயிராய் கலந்துள்ள இறைவனை நாம் வைத்துள்ள லிங்க மூர்த்தியின் மேல் ஆவாஹனம் செய்து வழிபடுதல் ஆன்மார்த்த பூஜை எனப்படும். சாதாரணமாக நாம் வீட்டில் வழிபடும் பூஜை யும் ஆன்மார்த்த பூஜையே.

பிறகு யோக அதிகாரம்.
அதாவது அகமர்ஷனம் எனப்படும் உடலை சுத்தப்படுத்தும் அனுஷ்டானத்திற்கு பிறகும் புறத்தில் சிவ பூஜை செய்வதற்கு முன்னும் செய்யப்படும் அக பூஜையே யோக அதிகாரம்.

நம் கைகளால் எந்த பூஜை பொருளும் தொடாமல் உள்ளத்திலே நினைத்துக்கொண்டு பாவனை செய்து கொண்டு இறைவனுக்கு செய்யும் அபிஷேக அராதனைகள் அனைத்தும் செய்வதும் சகல்ப பிராணாயாமம் செய்வதும் முத்திரை பிடிப்பதும் யோகம் எனப்படும்.

பிறகு அப்படி உள்ளத்திலேயே வழிபட்ட இறைவனை புறபூஜை செய்ய வேண்டும் என எண்ணி… இறைவா என் ஆன்மாவில் குடி கொண்டு அக பூஜையை ஏற்றுக் கொண்டாய். இனி உன்னை புறத்திலும் வழிபட வேண்டும் என எண்ணுகிறேன். எனக்காக எனக்குள் இருக்கும் நீ சிரிது நேரம் இந்த லிங்க மூர்த்தியின் மேல் வரவேண்டும் என் பூஜையை ஏற்க வேண்டும் என வேண்டி செய்யும் பூஜை புற பூஜை.

அபிஷேகம் பஞ்சப்பிரம மந்திரம் 16 உபச்சாரங்கள் என அவரவர் கால அவகாசம் பொருளாதாரம் பொருத்து இவைகளை செய்யலாம். முக்கியமானது பூவும் நீரும் மட்டுமே. செய்து முடித்த பின் மூர்த்தியின் மேல் உள்ள இறைவன் நம் ஆன்மாவிற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார். இப்படி கிரியை யோகம் செய்யும் பொழுது தான் முன் பிறவி பாவங்களை எல்லாம் இறைவன் அழிக்கிறார்.

நாளை நிர்வாண தீக்கை பற்றி பார்ப்போம்.

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Share