சிவசிந்தனை பாகம்-8

சிவசிந்தனை பாகம்-8

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

விசேஷதீக்கை.

கிரியை முறையில் மூன்றாவதாக வழங்கப்படும் தீக்கை விசேஷ தீக்ஷை.

இதை பெற்றால் என்ன நமக்கு செய்வார்கள் என காண்போம்.

கிரியையில் முன் கூறிய இரண்டு தீக்கை முறையும் குறிப்பிட்ட காலம் வரை செய்தால் மட்டுமே விசேஷ தீக்ஷை பெரலாம். .

விசேஷ தீக்ஷையில் நம் உடலில் உள்ள அதிதெய்வங்களை விலக சொல்லிவிட்டு இந்த ஆன்மாவை சிவ பரம் பொருளோடு சேர்கும் பணியை குரு நிகழ்துவார்.
சொல் பிரபஞ்சம் பொருள் பிரபஞ்சம் இவைகளை நீக்குவார்.

சொல் பிரபஞ்சம் என்றால் நாம் சொல்லும் சொல். இவை மந்திரம் பதம் வண்ணண் எனப்படும்.

அதாவது மந்திரம் என்றால் எழுத்து

பதம் என்றால் வார்த்தை

வண்ணம் என்றால் வாக்கியம்.

ஒன்றிற்கும் மேலான எழுத்து சேர்ந்சால் வார்தை. ஒன்றிற்கும் மேலான வார்தை சேர்ந்தால் வாக்கியம்.

பொருள் பிரபஞ்ம் என்றால் நாம் சொல்லும் சொல்லின் பொருளாய் உள்ள பொர்ட்கள்.

கப் என்பது சொல்
☕ என்பது பொருள்.
பொருள் பிரபஞ்சததில் 224 புவனங்கள்

36 தத்துவங்கள் உள்ளன
இவைகளை 5 கலைகளாக பிரிக்கலாம்.

அவை

1.நிவிர்த்திகலை
2.பிரதிட்டாகலை
3.வித்தியா கலை
4.சாந்தி கலை
5.சாந்தியாதீத கலை

இவை அந்திற்கும் அதி தெய்வங்கள் உண்டு.

ஆக சொல் பிரபஞ்சத்தில் மந்திரம்
பதம்
வண்ணம்
பொருள் பிரபஞ்சத்தில்
புவனங்கள்
தத்துவங்கள்
கலைகள்

இவை 6 யும் 6 அத்துவாக்கள் எனப்படும்.

இவர்களை தகுதி உடைய குருமார்கள் கிரியை மூலம் வில்குவார்கள். இவைகளை கடந்து சென்றால் இறைவனை உணரலாம்.
சரியை கிரியை முறைகள் சரியாய் செய்து பக்குவப்பட்ட ஆன்மாவாக இருப்பவர்கள் நிர்வாண தீக்கையில் இறைவனை உணர்வர்.

இதை செய்ய நம் உயரத்திற்கு தர்பை புல்லை செய்து நான்கு முடிச்சுக்கள் இட்டு ஐந்து பகுதியாக்கி ஐந்து புதியும் ஐந்து கலையாக பாவித்து ஒவ்வொரு கலையில் உள்ள முடிச்சையும் முறித்து அந்த அந்த அதி தெய்வதை விலக சொல்லி சிவ பெருமானிடத்தில் ஆன்மாவை ஒப்படைப்பதே இந்த நிர்வாணதீக்கை.

இப்படி செய்யும் போது.
நம் உடலில் உள்ள அந்தத்த கலைகளுக்குறிய விகாரங்கள் உடுங்கும். ஒடுங்க வேண்டும்.

இவைகள் கிரியையாக மட்டும் இல்லாமல் எண்ணத்தாலும் செயல்பட வேண்டும் அந்த தீக்ஷை பெருபவருக்கு.

செயலால் மட்டும் நிகழ்ந்து எண்ணத்தால் பக்குவம் அடையா விட்டால் மீண்டும் பழய படி ஆக வேண்டியது தான்.

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Share