சிவன் கோவில் வரலாறு மற்றும் தகவல்கள்

சிவன் கோவில் வரலாறு மற்றும் தகவல்கள்

‪+91 75399 31749‬: அருள்மிகு கைலாசநாதர் கோயில், திங்களூர், தஞ்சாவு ர்

அன்னப்பிரசானம் என்றால் குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பது ஆகும். கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு அம்புலியை காட்டி சோறு}ட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான்.

சிறப்பம்சங்கள் :
★ தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
?????
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் கோயில்,
திங்களூர்,
தஞ்சாவூர்.
?+91-4362-262 499,9344589244,9443589244.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-351
?????
[7/21, 8:02 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு குபேரபுரீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

குபேரன் வரலாறு :
ஒரு சமயம் பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராயினும், சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத்தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன். இது எதிலும் சேராமல் பெண் என்ற சொல்லுக்கே களங்கம் ஏற்படுத்த சூர்ப்பனகைக்கு பக்தியும் கிடையாது. பெண்ணுக்குரிய நாணமும் இல்லாமல், ஆணழகர்களை தேடித்திரியும் காமாந்தகாரி.

குபேரனின் இருபுறமும் இவர்கள் அமர்ந்தனர். குபேரன் அரசாட்சி நடத்த, அழுகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினான் குபேரன். கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவன், கையால் அபயமுத்திரை காட்டுவான். அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி. இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள்.

சிறப்பம்சங்கள் :
★ குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது.
?????
முகவரி
அருள்மிகு குபேரபுரீஸ்வரர் கோயில்,
தஞ்சாவூர் -613 001.
?+91-96778 18114.
கோயில்களின் வரலாறு
பதிவு-350
?????
[7/21, 8:03 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி

வயலில் கிடைத்த முருகன்:
இங்கு வசித்த விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய முருகன், ஒரு வயலைச் சுட்டிக்காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். விவசாயி, இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின் வயலில் முருகன் சிலையை எடுத்த அவர்கள், இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள்புரிந்த முருகன் எழுந்தருளிய தலமென்பதால், விருப்பாச்சி ஆறுமுகனார் என்று பெயர் பெற்றார்.

நாக சுப்பிரமணியர்:
மூலஸ்தானத்தில் முருகன், ஆறு முகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. காலையில் மட்டும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். இவருக்கு அருகில், ஏழுதலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்க, அதன் மீது மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவருக்கு பூஜை செய்தபின்பே, மூலவரை பூஜிக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இவரைப்போலவே கோயில் முன் மண்டபத்தில் செல்வ கணபதிக்கு அருகில் நாக விக்னேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

ருத்ராட்ச சிவன்:
தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், சிவன் ருத்ர மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கு எதிரில் நந்தி இல்லை. சிவதீட்சை பெற்று, குரு அந்தஸ்தில் இருப்பவர்கள் நெற்றியில் ருத்ராட்ச மாலையை அணிவர். இதைப்போலவே இங்கு சிவலிங்க பாணத்தில் ருத்ராட்ச மாலை இருக்கிறது. இங்கு சிவன், குருவாக இருப்பதாக ஐதீகம். எனவே, இவரது சிலையோடு சேர்த்து ருத்ராட்ச வடிவம் உள்ளதை வேறெங்கும் காண முடியாத அமைப்பு. குரு பெயர்ச்சியால் தோஷம் உண்டானவர்கள், வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்ளலாம். ருத்ரமூர்த்திக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யும்போது, அன்னத்திலேயே ஒரு லிங்கம் பிடித்து, பூ, வில்வம் அணிவித்து, சந்தனம் வைத்து பூஜை செய்கின்றனர். மறுநாள் அதை ஆற்றில் கரைத்து விடுகின்றனர். இந்த அன்ன லிங்க தரிசனம் மிக விசேஷமானது.

முனை மழுங்கிய வேல்:
கொட்டக்குடி ஆற்றின் மேற்கு கரையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. சித்திரைப் பிறப்பன்று இந்த முருகன், வயலில் கிடைத்தாராம். எனவே அன்று இவருக்கு விசேஷ அபிஷேக, பூஜைகளுடன் விழா நடக்கிறது. முருகன் சன்னதி எதிரில், முற்காலத்தில் வழிபடப்பட்ட வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது. முருகன், தனது பக்தர்களுக்கு இவ்வாறு முனை மழுங்கிய நிலையில் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு எதிரே தீர்த்தத்தொட்டி உள்ளது. இந்த தீர்த்தம் எங்கிருந்து உருவாகி வருகிறது எனத் தெரியவில்லை. முருகனின் பாதத்திற்கு கீழே உற்பத்தியாகி, இங்கு வருவதாகச் சொல்கின்றனர்.

சிறப்பம்சங்கள்:
★ சிவன் சிலையோடு சேர்த்து ருத்ராட்ச வடிவம் இருப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
?????
முகவரி
அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில்,
கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி,
தேனி.
?+91-93641 19656.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-352
?????
[7/21, 8:03 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, தேனி

சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால்தான் இக்குகை கைலாசகுகை எனப்படுகிறது.

குகைச்சிறப்பு:
இங்கு விபூதிக்குகை, சர்ப்பகுகை, பாட்டையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.

ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடனான பாறை உள்ளது. இதில் தவம் செய்திட பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குன்றுதோறாடல் கோயில்:
திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர், மலைக்கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. சுருளி வேலப்பர், மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர், மகாலிங்கம், சந்தான கிருஷ்ணர், வீரபாகு, ராமபிரான், லட்சுமணன் உள்ளனர். இம்மலைப்பகுதியில் சித்தர்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.

குகைக்குள் சிவதரிசனம்:
இங்குள்ள ஒரு குகையில் கைலாசநாதர் (லிங்கம்) சன்னதியும், குகையின் மேலேயுள்ள குன்றில் முருகன் சன்னதியும் உள்ளன. இந்த குகையை கைலாச புடவு (கைலாச குகை) என்கிறார்கள். குகைக்குள் ஒவ்வொருவராக ஊர்ந்து சென்று வழிபட முடியும். குகையின் உள்பகுதியில் இருவர் மட்டும் அமர்ந்து பூஜை செய்யலாம். குகைக்குள் இருந்து தீர்த்தம் வந்து கொண்டிருக்கிறது. குகைக்குள் சென்று வருவதே யோகாசன பயிற்சி செய்வது போலாகும். கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. தீர்த்தம் பட்டு இந்த பாறையின் துகள்கள் வெண்ணிறத்தில் இருக்கிறது. இந்த துகளையே பிரசாதமாக தருகிறார்கள்.

சிறப்பம்சங்கள்:
★ விபூதிக்குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.
?????
முகவரி
அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்,
சுருளிமலை,
தேனி.
?+91-97903 55234.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு- 353
?????
[7/21, 8:03 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில், கம்பம், தேனி

திருமங்கையாழ்வார்:
திருமங்கை நாட்டை ஆண்ட நீலன் என்னும் மன்னன், தினமும் 1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, திருமங்கையாழ்வார் என்று பெயர்பெற்றார். திருமங்கையாழ்வாரின் பக்தியையும், அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக, இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், திருமங்கையாழ்வார் திருடிய வைபவம் நடத்துகின்றனர். அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து, காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும், இதை பட்டோலை வாசித்தல் என்பர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவார்.

கம்ப பெருமாள்:
சிவன், பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில், தனித்தனி கொடிமரங்களுடன் உள்ளன. திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாள் சன்னதியில் ஓண தீபம் ஏற்றப்படும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி பெருமாள் மீசையுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பில் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர். திருவிழா நாட்களில் பெருமாள் சிலை கிடைக்கப்பெற்ற இடத்திலுள்ள கம்பத்திற்கு முதல் பூஜை செய்கின்றனர். இவ்வூரில் தேரோட்டம் மூன்று நாட்கள் நடக்கும். தாயார் அலமேலுமங்கை தனிச்சன்னதியில் இருக்கிறாள். விமானத்துடன் தரிசிக்கும் வகையில் இவளது சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கும் சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன், பூஜை நடக்கிறது.

கமண்டல தட்சிணாமூர்த்தி:
சிவன் கோயிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். காசி விசாலாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி கமண்டலத்துடன் காட்சி தருகிறார். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. குரு பெயர்ச்சியின்போது ஹோமம் நடத்தி விசேஷ பூஜை செய்கின்றனர். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். காசி விநாயகர், காவல் தெய்வம் வடமலை மொட்டையாண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது.

வித்தியாசமான முருகன்:
இங்குள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்ட இவருக்கு முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் ஒரு முகமும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. செவ்வாய் தோஷ நிவர்த்தி பெற, திருமணத்தடை நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சிறப்பம்சங்கள்:
★ இக்கோயில் ஒரு மும்மூர்த்தி தலமாகும். இத்தலத்தில் பிரம்மா வன்னி மர வடிவில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
?????
முகவரி
அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில்,
கம்பம்,
தேனி.
?91-94864 69990,93612 22888.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-354
?????

Share