திருமூலர் சன்னதி

திருமூலர் சன்னதி

1. கயிலையில் நந்திதேவனிடம் சிவயோகியார் ஞான உபதேசம் பெறுதல்.
2. சிவயோகியார் ஆகாய மார்க்கமாய் தெந்திசையை நோக்கி ஆவடுதுறை வழியாக செல்லுதல்
3. சாத்தனூர் பகுதியில் மாடு மேய்த்த மூலன் பாம்புத் தீண்டி இறந்ததால் மாடுகள் கதறின. ஆகாய மார்க்கமாய் சென்ற சிவயோகியார் அதைக் காணுதல்.
4. பசுக்களின் துயரம் கண்டு மனம் இரங்கிய சிவயோகியார் இறந்த மூலன் உடம்பினுள் தன் உயிரைப் புகுத்தல்.
5. சிவயோகியார் தன் உடலை மரத்தினுள் வைத்துவிட்டு மூலன் உருவத்தில் பசுக்களுடன் சாத்தனூர் புறப்படுதல்.
6. பசுக்களுடன் சிவயோகியார் சாத்தனூர் அடைதல்.
7. மூலன் மனைவி தன் கணவரென எண்ணி யோகியரை விட்டுக்கு அழைத்தல். யோகியார் மறுத்தல்.
8. மூலன் மனைவி ஊர் மக்களிடம் முறையிடுதல்.
9. சிவயோகியார் எனத் தெரிந்து ஊர்மக்கள் திரும்பிச் செல்லுதல்.
10. திருவாவடுதுறையில் திருமூலர் படர் அரசு மரத்தின் கீழ் அமர்ந்தார். ஆண்டிற்க்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களாகிய திருமந்திரம் எழுதுதல்.

Share