திருமூலர் ஜீவசமாதி

திருமூலர் ஜீவசமாதி

கும்பகோணம்-திருவாவடுதுறை அருகே சாத்தனூர் கிராமதில் திருமூலர் சன்னதி

திருகயிலையிருந்து நந்தியின் சீடரான சிவயோகி ஒருவர் அகத்தியரை தரிசிக்க தென்னகம் வந்தார். வரும் வழியில் பல சிவாலங்களை தரிசனம் செய்தபின் திருவாவடுதுறை கோமுக்திஸ்வரரை தரிசனம் பெற்று புரப்பட்டார். அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் மாடு மேய்க்கும் மூலன் என்பவன் பாம்பு கடித்து இறந்துகிடப்பதை கண்ட மாடுகளேல்லான் சப்தம் செய்து இறந்த மூலனின் உடலை சுற்றிவந்தன. இதனை கண்ட சிவயோகி பிரகாயபிரவேசம் செய்து மூலனின் உடலினுள் புகுந்தார். பிறகு அவரே திருமூலராக திருமந்திரத்தை இயற்றினார்.

மூலனின் உடம்பில் கூடு விட்டு கூடு புகுந்த இடமே இந்த சாத்தனூ திருமூலர் கோயில்.

Share