நமக்கு நாமே கடவுள்- உயிரை உணர்ந்தால் நாம்கடவுள்

நமக்கு நாமே கடவுள்- உயிரை உணர்ந்தால் நாம்கடவுள்

நமக்கு நாமே கடவுள்- உயிரை உணர்ந்தால் நாம்கடவுள்

உயிரே கடவுள்-அஹம் பிரம்மாஸ்மி

அறிவு அசையும் போதுமனம் என பெயர் பெறுகிறது. மனம் அசையா நிலை நின்று ஜோதி வழியில் நில்வோருக்கு, வினையான கொழுப்பு எல்லாம் கரைந்த பின் வினை எனும் குப்பையால் எழுந்த இந்த தேகம் மட்டும் எப்படி இங்கே கிடந்திடும்.

மனிதனுக்கு விதியின் மீது உள்ள நம்பிக்கை விதித்தவனான உயிரிடம் கிடையாது. விதியின் விளையாட்டின் கடைசி ஆட்டம் மரணம் மட்டும் தான்.இன்பத்தில்ஆரம்பம்துன்பத்தில்முடிவுஅதுதான் விதி.

சேரிடம் அறிந்துசேர்-

அறிவை அரிவால் அறிந்து மனத்திடம் சேராது உயிரிடம் சேர்தலே முக்தி. கோயில் இல்லாத ஊர் உண்டு ஆனால் உயிர் இல்லாத இடமே கிடையாது.

உயிரை தானே தியானிக்கும் போது உயிர் கடவுள் வடிவம் பெறுகிறது .படைத்தவன் தன் படைப்புகளை அழிக்க விரும்புவது இல்லை .படைக்கப்பட்டவன் தனது அறியாமையால் மன மாய வலையில் வீழ்ந்து தன்னை தானே அழித்து கொள்கிறான்.

உடல் மிக பெரிதாகவும்,, உயிர் இல்லாதது போல் தோன்றுவதே மாயை. உயிர் மிக பெரிதாகவும் உடல் மிக சிறிதாகவும் விளங்குவதே ஞானம்.அறியாமை ஒன்றே நம் மரணத்துக்கும் நோய்க்கும் காரணம்ஆகிறது.

உயிரிலிருந்து நாம் விலகி நிற்ப்பதுவே நம் நோய்களுக்கு மூலகாரணம் ஆகிறது. நம் கடவளான உயிரை மட்டுமே கவனத்தில் கொண்டு நோய், மூப்பு, மரணம் இவைகளை வெல்லும் உன்னத கலையே சம்மதம் உயிர்கல்வி.

உயிரேகடவுள்….அஹம் பிரம்மாஸ்மி…

Share