பட்டினதார் பாடலிருந்து கண்ணதாசன் எழுதிய பாடல்

பட்டினதார் பாடலிருந்து கண்ணதாசன் எழுதிய பாடல்

“மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே”

என்ற பாடல் பிரசித்தமானது. இப்பாடலைப் பிரசித்தமாக்கியவர் கவிஞர்
கண்ணதாசன். ‘பாத காணிக்கை’ என்ற திரைப்படத்தில்

,“வீடுவரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?”

என்று அவர் எழுப்பிய கேள்வி இந்தப் பட்டினத்தார் பாடலைப் பார்த்துதான்.
பட்டினத்தார் பாடலை வாசிக்க மறந்தவர்கள் கண்ணதாசனின் இந்தப்
பாடலைக் கேட்க மறந்திருக்க மாட்டார்கள்.

Share