பதஞ்சலியின்_யோக_சூத்திரங்கள்

பதஞ்சலியின்_யோக_சூத்திரங்கள்

#பதஞ்சலியின்_யோக_சூத்திரங்கள்

பல ஆயிரம் ஆண்டுகளுக்குஇன்ப அமிழ்தமாகிய விந்துவை உச்சித்தலைக் குகைக்குள் நிரப்பிவைத்தல் வேண்டும். அவ்வாறு நிரப்ப ஒரே வழி அது கீழ்நோக்கி ஒழுகிவிடாமல் மேல் வாயாகிய அண்ணத்தின்கண் தடுத்து, அடுப்பாகிய (இடகலை பிங்கலை சுழுமுனை) மூன்று நாடிகள் கூடுமிடத்து உண்ணாக்கால் தடுத்து அட்டமாகிய புருவ நடுவில் நிறுத்தி தியானிப்பதால் (கருமூலப்பையாகிய கருவில் புகாமல் இருக்க) நடு நாடியில் உறைத்து நிற்பதனால் நமன் ஆகிய எமன் அணுகான். முன்பே நம் முன்னோர்கள் மனதை அமைதிபடுத்த தியானத்தை மேற்கொண்டனர்.

யோகாசனத்தைப் பற்றி பல முனிவர்கள் கூறியிருந்தாலும், பதஞ்சலி மகரிஷி தன் “யோக சூத்திரங்கள்” என்ற நூலில் படிப்பவர் பிரமிக்கும் படி எழுதியுள்ளார்.

அதில், முதல் சூத்திரமே ‘இப்போது யோகம் விளக்கப்படுகிறது’ என்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் “மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்” என கூறியுள்ளார்.

பதஞ்சலி மகரிஷி, யோகாசனத்தை மிக எளிமையாக விளக்கியுள்ளார் ;
நம் மனம் எந்த ஒரு எண்ண அலைகளாலும் சலசலப்பு அடையாமல், அமைதியாக இருக்கும்போதுதான் நம் ஆழ்மனதை நம்மால் முழுமையாக அறிய முடிகிறது. இதுவே யோகமாகும்.

பதஞ்சலி யோகாவின் எட்டு நிலைகளையும் மிக எளிமையாக கூறியுள்ளார் ;

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.
2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.
3. ஆசனா – யோகாசனங்கள்
4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.
5.. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்
6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்
7. தியானா- தியானம்
8. சமாதி – இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது.
ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது. குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.
இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து
தியான முறைகளும் அமைந்துள்ளன.

+++++++++++++++++++

இன்ப அமிழ்தமாகிய விந்துவை உச்சித்தலைக் குகைக்குள் நிரப்பிவைத்தல் வேண்டும். அவ்வாறு நிரப்ப ஒரே வழி அது கீழ்நோக்கி ஒழுகிவிடாமல் மேல் வாயாகிய அண்ணத்தின்கண் தடுத்து, அடுப்பாகிய (இடகலை பிங்கலை சுழுமுனை) மூன்று நாடிகள் கூடுமிடத்து உண்ணாக்கால் தடுத்து அட்டமாகிய புருவ நடுவில் நிறுத்தி தியானிப்பதால் (கருமூலப்பையாகிய கருவில் புகாமல் இருக்க) நடு நாடியில் உறைத்து நிற்பதனால் நமன் ஆகிய எமன் அணுகான்.
+±+±+++++++++++++++++++++++++

உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்
———————————————
முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல
ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று
குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம்
மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும். அ…தாவது
ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட
சக்தியே குண்டலினி. குண்டலம் போல
வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு. குண்டலினிக்கு
சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச்
சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பாம்பாட்டி
சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும்
குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை,
அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள்,
ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி,
வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ
சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி,
தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று
இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு
உண்டு. குண்டலினிச் சக்தியை மூலாதாரச்
சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை
எழுப்புதல் என்பர்.

பொதுவாக யோக சாதனம்
என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத்
தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம்
என்று ஒரு பொருள் உண்டு. அதாவது
வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே
தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட
குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும்
கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது
உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள்
சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே
சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே
மோட்சம், இதுவே முக்தி. இதையே
ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும்,
நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல்
திறந்தது என்று சொல்வது இதைத்தான்.
கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.
இதையே திருமூலர், மூலாதாரத்
துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத்
துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு,
காலனைக் குறித்த கவலையில்லை, பயமும்
இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து
குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது
ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும்
அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து
அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை
உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை,
பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி,
காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி,
வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும்
கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக்
கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி
உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான்
சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து
அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை
அக்கினிகுண்டலினி என்பர்.

அனாகதம்
தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது
சூரிய குண்டலினி என்பார்கள். அதையும்
தாண்டி சுழுமுனையின் இறுதிவரை
செல்லும் போது சந்திர குண்டலினி
என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை
பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும்
மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி
மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில்
உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள
விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ
முடிச்சு என்பனவாம். யோகத்தின் குறிக்கோள்
இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து
குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச்
செய்வதே ஆகும்.

அங்ஙனம் நிலைபெற்று,
ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான்
சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு,
கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம்,
செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால்
போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப்
பருகுகிறான்.

அமரத்துவம் பெறுகிறான்.
பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே
உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த
அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த
பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும்
சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது. அவளோடு
அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால்
உடம்பு கொழுந்து போன்று என்றும்
பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர்
சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும்
யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து
செய்துவர தாண்டிவிடலாம், ஆனால்
ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது
அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட
பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த
குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில்
திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம்,
இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.
இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தியானம் மிக முக்கியமான ஒரு செயலாகும். தற்போது ஒரு சில இடங்களில் தியானம் சொல்லிதருவதாக பணம் சம்பாதிக்கிறார்கள்.

தியானம் என்பது அடுத்தவர் சொல்லித்தரும் விசயம் அல்ல, அது ஒவ்வொருவருக்குள்ளும் தனிமையில், அமைதியில் இருந்து முதலில் தன்னை தானேயும், பின் இந்த பிரபஞ்சம் உருவானதையும், உருவானதன் நோக்கமும், சகல ஜீவராசிகள் பிறப்பு இறப்புகளின் உண்மையையும் உணரும் நிலையாகும்.

இந்த நிலையில் இருந்து தான் நம் சித்தர்கள் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கலைகளையும் நமக்கு எழுதிவைத்தார்கள். ஆய கலைகள் 64(மருத்துவம், ஜோதிடம், மந்திரம்………,) நம் உடலுக்கும், 65 வது கலையான தியானம் உயிருக்கும், அதாவது இறைவனை உணர்வதர்க்கும் என்று சொன்னார்கள்.

தியானம் தான் தனிமனிதனின் அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரே செயல். தியானத்திலும் சிறந்த செயல் இந்த உலகில் வேற எதுவும் கிடையாது.

தியானம் செய்வதன் மூலம் உடல், மனம் தெளிவு மட்டுமல்லாமல், ,நூலகத்திலிருந்தும் அறிய முடியாத, கூகுளில் தேடியும் கிடைக்காத, விஞ்ஞானியால் கூட கண்டுபிடிக்க முடியாத, பல விசயங்களை நம்மால் அறிய முடியும்.

எப்படி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடங்களும் உள்ளனவோ, அதேபோல் தியானத்தில் அனைத்து விசயங்களும் உள்ளன.
சுருக்கமாக சொன்னால், “தியானம் என்பது பல்கலைக்கழகம் போன்றது”.

எனவே அனைவரும் தியானத்தை கையாண்டு அதிலுள்ள அனைத்து பாடங்களையும் அறிந்து வாழ்வில் மேன்மையடைந்து இறைவன் அருளையும் பெற வாழ்த்துக்கள்.

Share