மன ஓர்மை (தியானம்)

மன ஓர்மை (தியானம்)

மன ஓர்மை (தியானம்)

1) சிவராசயோகம் என்றால் என்ன?
கட்டொழுங்குமிக்க மன ஓர்மை பயிற்சி. இப்பயிற்சி, தன்னை உணரச் செய்து, ஆழ்மனத்தை திறக்கச் செய்து, உயர்ந்த விழிப்புணர்வு நிலையை உண்டாக்குகிறது. பட்டறிவின் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

2) மன ஓர்மையின் இறுதி இலக்கு என்ன?
தன்னை முழுமையாக அறிதல், வாழ்வின் இலக்கு அறிந்து மேம்பட வாழ்ந்து, நிறை நிலை மாந்தர்(perfect master) என்ற தகுதி பெறுதல்.

3) மன ஓர்மை செய்ய காரணம் என்ன?
நம் எண்ணம், செயல், சொல் அனைத்தும் சமன் நிலையில் இருக்க உதவும். மனத் தூய்மையும், மன ஓர்மையும் தவசி நிலை பெற அடித்தளமாகும்.

4) மன ஓர்மைக்கு பகைமை என்ன?
சோம்பலும், குரங்கு மனமும் ஆகும்.

5) மன ஓர்மையில் மனம் ஒழுங்கு பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
கவலை வேண்டாம். மெல்ல மெல்ல கட்டொழுங்கால் மனம் ஒழுங்கு பெறும்.

6) மன ஓர்மையில், பல் வேறு சிந்தனைகள் தொல்லை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
எண்ணங்களோடு சண்டையிட வேண்டும். பார்வையாளனாக கவனிக்க! காலவோட்டத்தில் மறைந்து விடும்.

7) மன ஓர்மையில், கவனிக்க வேண்டியது என்ன?
மன ஓர்மைக்குப் பொருத்தமான சில நேரங்கள் உண்டு. காலை, மாலை என கொள்ளலாம். எதைச் செய்தாலும் உடனே பலனை எதிர் பார்க்காதே! மன ஊக்கத்தோடு விரும்பிச் செய்க!

`தவம் செய்வார் தான் கருமம் செய்வார்` (குறள் 266)

Share