முச்சந்திவீதி

முச்சந்திவீதி

🌏#அழுகணிசித்தர்🌏

#முச்சந்திவீதி

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே

சத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேல் விருத்தி

அத்தை அடக்கிய நிலை ஆருமில்லா வேளையிலே

குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா

கோலமிட்டு பாரேனோ

#பொருளுரை

மூக்கின் முனையான சுழுமுனை, அதன் மேலே முச்சந்தி வீதியில் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஆக்கினை அடைவதற்கு ஐந்து சக்கரங்களின் இதழ்களை யோக சாதனையால் நிமிர்த்தி, ஐம்புலன்களை அடக்கி, மனம் மட்டுமே குவிந்த நிலையில் ஞானமாகிய குத்துவிளக்கை ஒளிரச் செய்து,

ஐந்துக்கு மேலே உள்ள ஆதாவது யோகா ஆதாரமாகிய ஆக்கினையில் ஒளிரும் ஞானப்பிரகாச அழகினை என் கண்ணம்மா நான் எப்பொழுது கண்டு களிப்பது?

#முச்சந்திவீதி

மூக்கின் நுனியிலிருந்து நெற்றியில் நேராகவும், இடது புருவம்,வலது புருவம் இரண்டிற்கும் நேராக ஒரே கோடு கிழித்தால் மூக்கிலிருந்து தொடங்கிய கோட்டினை சந்திக்கும் இடமே முச்சந்தி வீதி ஆகும்

மூன்றும் சந்திப்பும் இடம்தான் ஆக்ஞை என்னும் ஆறாவது சக்கரம் உள்ள இடமாகும்.

குறிப்பு-

தியானம் பிராணாயாமம் கபாலபதி போன்றவைகள் அறிந்தவர்களுக்கு இந்த விஜயம் மிக அருமையாக இந்தப் பாடல் விளங்கும் சர்வம் சிவார்ப்பணம்

Share