யாதவர்கள் யார் என்று தெரியுமா?

யாதவர்கள் யார் என்று தெரியுமா?
ஒரு ஐந்து நிமிடம் இந்த பதிவினை படியுங்கள்

அன்பான என் ஆயர்குலத்திர்க்கு வணக்கம்..
என் அன்பு சகோதர, சகோதரிகளே ஜாதி சான்றிதழில் மட்டும் யாதவ் என்று போட்டு கொண்டால் போதுமா?
முடிந்த வரையில் இனி வரும் தலைமுறை நமது அடுத்த சந்ததிகளுக்கு பெயர் வைக்கும் போது எடுத்துகாட்டாக

கேசவ கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன்
யது கிருஷ்ணன்
யாதவ கிருஷ்ணன்
வருன் கிருஷ்ணன்

கோகுல கண்ணன்
ரமேஷ் கண்ணன்
ராஜேஸ் கண்ணன்

நம் குழந்தைகள் பெயருக்கு பக்கத்தில் கிருஷ்ணன் or கண்ணன் என்று பார்த்து வைக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன்.

இந்தியாவில் பொதுவாக உயர்ந்த சமுதாயம் யார் என்று கேட்டால் ஐய்யர் என்று சொல்வார்கள், சரி அப்படியே வைத்து கொள்வோம் அந்த ஐய்யர் வீட்டு பூஜை அறை யில் போய் பாருங்கள் கிருஷ்ணன் இருப்பார்,யார் இந்த கிருஷ்ணன் ஒரு இடையன், அப்படியென்றால் இடையன் யார்? இந்த கேள்வியே உங்களிடமே விட்டு விடுகிரேன்.

நாங்கள்தான் ஆண்ட இனம் என்று பீத்திகொள்ளும் சமுதாயங்கள் 17 ம் நூட்றாண்டுக்கு முன் இவர்களின் வரலாறு என்னெவென்று கேலுங்கள் அவர்களுக்கே தெரியாது, ஆனல் உன் முப்பாடன் ஆனந்தகோன் 11 ம் நூட்றாண்டில் செஞ்சியே கட்டி ஆண்டவன் 1100ல் இருந்து 300 வருடங்கள் கோனார் ஆண்டுள்ளார்கள் அதர்க்கு செஞ்சிகோட்டயே சான்று.

நீ ஒளவைக்கு அர்புத கனி கொடுத்த அதியமானின் பரம்பரை.

பாண்டியனின் வம்சம் நீ, அதை நான் சொல்லவில்லை, இந்த உலகத்திர்க்கு மகா பாரதம் தந்த வீயச மாமுனிவரின் எழுத்துக்கள் செல்கிறது, பாண்டியன் சந்திர வம்சத்தை சேர்ந்தவன் என்பதற்கு வியாச மாமுனிவரே சான்று.

கம்பனின் ராமயனத்தில் சாரா நதியே பட்றி குறிப்பிடும் போது, அந்த நதியில் இடைச்சிகளின் ஆடைகள் அடித்து செல்லபட்டது என்று சாரா நதியே வர்னித்து இருப்பார். ஆக ராமாயண காலத்திலே இடையன் வாழ்ந்திருக்கிரான் என்பதற்கு கம்பனே சான்று.

5 நிலத்தில் வாழ்ந்த எவருக்கும் அரசன் என்கிற பட்டம் உன்னை தவிர யாருக்கும் இல்லை, என்ன புரியவில்லையா முல்லை நிலத்தில் வாழ்ந்த உனக்குதான் “கோன்’ இதர்க்கு தமிழில் அரசன் என்று பொருள்.

கோவலன் அவரின் மனைவி கன்னகியே ஒரு இடையர் வீட்டில்தான் தங்கவைத்துவிட்டு வெளியில் சென்றார்.

ஏறுதழுவல் உன்னுடைய விளையாட்டு நான் சொல்லவில்லை, கலி தொகை சொல்கிறது.

கடை ஏழு வள்ளல்கள்:
பேகன்
பாரி
காரி
ஆய்
அதிகன்
நள்ளி
ஓரி
யார் இவர்கள் உன் பரம்பரையே சேர்ந்தவர்கள்தான் இவர்களும்.

ஆநந்தரங்க பிள்ளை முதன் முதலில் கப்பல் ஓட்டிய தமிழன், ஒரு இடையன் என்பதற்காக அது மறைக்கப்பட்ட கொடுமை.

ஆனந்த கோன் – செஞ்சிகோட்டையே கட்டியவர்
கிருஷ்ணகோன்- கிருஷ்ணகிரி கோட்டையே கட்டியவர்,
யாருக்காவது தெரியுமா இந்த மாமன்னர்களை பட்றி 17ம் நூட்றாண்டுக்கு பின் வந்தவர்களை புகழ் பாடும் இந்த திருட்டு திராவிட கும்பலுக்கு ஏன் இடையன் மீது இவ்வளவு ஏட்றதாழ்வு என்பது இதுவரை புரியாத புதிர்தான்.

ஒளரங்கசீப்பை ஓட ஓட விரட்டி அடித்தவன் நம் வீர சிவாஜி, மராட்டிய தலைவன்.

ஹரி இந்த உலகத்தை படைத்தார்
ஹரி பிரம்மனை படைத்தார்

பிரம்மன் ஏழு ரிஷிகலே படைத்தார்
அதில் ஒருவர்தான் சந்திரன்.

இந்த சந்திர வம்சத்தில் வந்தவர்கள்தான் யாதவர்கள், என்ன புரியவில்லையா விளக்கம் தருகிரேன் பொருமையாக படியுங்கள்,

சந்திரனுக்கு, தட்சன் தனது 60 மகள்களில் 27 மகள்களெ சந்திரனுக்கு கட்டி கொடுத்தார், திருவாதிரை
ரோகினி
மூலம்
புனர்பூசம்
இது போன்ற 27 நட்சத்திரங்கள் சந்திரனுக்கு கட்டி வைக்கப்பட்டது.
இதில் சந்திரன் அன்பாக இருந்தது ரோன்கினி நட்சத்திரதிடம்தான்.

தேவர்களின் குல குருவான பிரகஸ்பதி யின் மனைவி தாரை யின் அழகில் சந்திரன் மயங்கி, தாரையே தூக்கி சென்று விட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த பிரகஸ்பதி பிரம்மனிடம் முறையிட்டார், சந்திரன் அசுர குலகுருவான சுக்ராச்சாரியிடம் தஞ்சம் அடைந்தார்.

பிறகு பிரம்மன் தலையிட்டு தாரையே மீட்டு பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார், அப்போது சந்திரனின் கரு தாரையின் வயிட்றில் இருந்தது, அதனால் தாரையே பிரகஸ்பதி ஏட்றுகொல்லவில்லை.

சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த மகன் புதன்.

புதனுக்கும் இலை என்கிர பென்னுக்கும் பிறந்தவர் தான் ஆயூஸ் மன்னன்

ஆயூ மன்னனுக்கு பிறந்தவர்தான் புரூருவஸ்.

புரூருவஸ்க்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்தான் நகுசன்

நகுசனுக்கு 5 பிள்ளைகள் அதில் மூத்தவர்தான் யயாதி

யயாதியின் மூத்த மனைவி தேவையானிக்கும் பிறந்தவர்கள்தான்

# யது ( நம் முப்பாட்டன்)

# துர்வசு ( சின்ன முப்பாட்டன்)

யயாதியின் இரண்டாவது மனைவி சர்மிஸ்டை இவலுக்கு மூன்று மகன்கள்

# திரஹ்யூ

# அனூ

# புரு

யாயாதி மன்னனுக்கு இளைமை தேவையானியின் தந்தை சுக்ராசாரியரால் பரிபோகிரது
விமோச்சனம் என்ன என்று கேட்டதர்க்கு உன் மைந்தர்கள் யார் இளைமையே தருகிரார்கலோ நீ பெட்று கொல்லலாம் என்றார் சுக்ராசாரியார். என்ன காரனம் என்றால் தன் மகளுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமையால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

இளமையே எல்லா மைந்தர்களும் மருத்துவிட கடேசி மைந்தன் புருவாள் கிடைகிரது, அதனால் அரசாட்சி யது, துர்வசுக்கு மருக்கபட்டு புருவுக்கு நாடு வழங்கபட்டது.

புரு மன்னனுக்கு பிறகு வந்தவர்கள்

ஜனனேஜெயன்
பிரசாவன்
சாயதி
திடன்
நீலன்

துஷ்யந்தன்-சகுந்தலை (இவள் ஒரு யாதவ பென்)
பரதன்
பெளமன்
சுகேத்திரன்
அஸ்தன்-அஸ்தினா புரம் என்று பெயர் வரக் காரனமாய் இருந்தவன்.

நிகும்பன்
அரசமீளி
வருணன்
குரு- இவர்தான் கெளரவர்கள் என்கிர பட்டத்தை வாங்கியவர்.

பிரதீபன்

சந்தனு

பீஸ்மர்

சித்திர வீரியன்

1.திருதிராஷ்டன்

2.பாண்டு

திருதிராஸ்டனின் மைந்தர்கள் துரியோதனன் என்கிர இடையன்.
எப்படி இடையன் ஆக முடியும் என்ற சந்தேகமா?

திருதிராஷ்டனின் மனைவி காந்தாரி
யார் அந்த காந்தாரி??

யதுவின் தம்பி துர்வசுவின் வழியில் வந்தவல்தான் இந்த காந்தாரி.

பாண்டுவின் மைந்தர்கள்

1.தர்மன்
2.பீமன்
3.அர்ச்சுனன்
4.நகுலன்
5.சகாதேவன்

இவர்களும் யாதவர்கள்தான், என்ன சந்தேகமா???

பாண்டுவின் மனைவி குந்தி யார் என்று தெரியுமா???

மூத்த மகன் யதுவின் வம்சத்தில் பிறந்தவள்தான் இந்த குந்தி.

மூத்த மகன் யதுவுக்கு பட்டத்தையும் பதவியயும் வாங்கி கொடுக்கவே கிருஷ்ணன் யது குலத்தில் யாதவாக அவதரித்தார்.

பாராத போருக்கு பின் காந்தாரி சாபத்தல் யாதவர் இனமே முலுமையாக அழிந்து போனது.

ஒரு நாள் மேலிருந்து கீழாக கிருஷ்ணன் பார்த்தார், கங்கை, யமுனையுடன் சேர்ந்து கன்னீர் நதியும் ஓடியது,
திகைத்தி போன கிருஷ்ணன் கீழே வந்தி பூம தேவியுடன் கேள்வி கேட்டார், அதர்க்கு பூமி அன்னை சென்ன பதில் ‘ பிரபுவே இந்த பாவ லோகத்தில் இந்த பாவியர்கலை என்னால் சுமக்க முடியவில்லை, யாதவர்களின் கால் தடங்கள் திரும்ப பட்டால்தாந் இது மோட்சம் அடையும் என்று பூமி அன்நை சொல்ல உடனே 9 இடங்களில் ஆயர் இனம் அவதரிக்கப்பட்ட்து.

Share