அகத்தியர் வைத்திய சதகம் – 60

அகத்தியர் வைத்திய சதகம் – 60

*பித்தத்தில் உஷ்ணம் கொண்டால் குறிக்குணம்*
தழைப்பான பித்தத்தில் உஷ்ணம் கொண்டால் சயம் அத்திசுரம் வெதுப்பு சத்தி குன்மம்

கழைப்பாகி பொருத்துளைவு அதிசாரங்கள் கடுப்புடனே வயிற்றுவலி மூலவாய்வு

இழைப்பாகி ஊண் மறுத்தல் நாகசப்பு ஈரல்வலி கனவுடனே சங்காரதோசம்

வளைப்பான பைத்தியநோய் எரிவுதாகம் வந்தணுகில் பலபிணிக்கும் வகையதாமே.

*பொருள் :* பித்தத்தில் உஷ்ணம் சேர்ந்தால் சயம், அஸ்தி சுரம், உடல் சூடு, சத்தி குன்மம், பொருத்துகள் தோறும் உளைச்சல், அதிசாரம்,வயிறு கடுப்பு, வயிற்று வலி, மூல வாய்வு, இளைப்பு, ஊண் மறுத்தல்,நா கசப்பு, ஈரல் வலி, கனவு காணுதல், பில்லி சூனிய தோசம், கிரிகை நோய், உடல் எரிச்சல், தாகம் போன்ற பல நோய்கள் வரும்.

Share