அகத்தியர் வைத்திய சதகம – 7

பரிசமுள்ள ரூபமெல்லாம் விழியில் காட்டும் பண்பான ரசமதுவே நாவில் காட்டும்

பிரிசமுள்ள கெந்தம் நாசியினில் காட்டும் பேசில் உயிர் கூறு கன்மேந்திரியந்தான்

வரிசையுடன் அஞ்சாகும் வாக்கு பாதம் வளர் பாணி பாயுருவியோடு உபத்தமஞ்சாம்

விரிவதற்கு வாக்குவாய் பாதம் காலாம் வியன் பாணி கையாம் பாயுருக்கண்ணாமே.

 

பொருள் : ரூபம் என்பது கண்ணில் காட்டும் செயல், ரெசம் என்பது நாவில் தெரியும் சுவை, கந்தம் என்பது நாசியில் அறியப்படும் வாசம் இவைகள் ஆகும். உயிர்க் கூறின் முக்கியமான கருவிகளாகிய கண் மேந்திரியங்கள் 5 எவை எனில் வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம். அதாவது வாக்கு என்பது வாய், பாதம் என்பது கால், பாணி என்பது கை,பாயுரு என்பது மலத்துவாரம்

Share