அகஸ்தியர் வைத்திய சதகம் – 25

அகஸ்தியர் வைத்திய சதகம் – 25

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 25*

கோபமுள்ள சிலேற்பனந்தான் அப்பின்கோபம் குணமூன்றும் கோபமதால் கொளுநோயெல்லாம்
தாபமுறும் ஏடனை மூன்றதனைக்கேளாய் தார ஏடனை புத்திர ஏடனை தான் என்றும்
சோப உலகேடனை தான் மூன்றும் கேளு சொல்லும் தார ஏடனை பெண்ணாசையாதல்
தாபமுறும் புத்திர ஏடனை தான் புத்திரர் தனை தேடி ஆசைகொள்ளல் தயவு கொண்டே.

*பொருள் :* சிலேற்பனம் என்பது நீரின் கோபம் ஆகும். இம்மூன்று தோசங்களும் கோபம் கொள்ளுவதினால் நோய் உருவாகிறது. ஏடனை (ஆசை) மூன்று எவை எனில் தார ஏடனை, புத்திர ஏடனை மற்றும் உலக ஏடனை என்பன ஆகும். தார ஏடனை என்பது பெண்ணாசை,புத்திர ஏடனை என்பது புத்திரர்கள் மீது ஏற்படும் ஆசை ஆகும்.

இடகலை, பிங்கலை, சுழுமுனை சரிவர செய்யததால் வாதம்,பித்தம், சிலேத்துமத்தில் மாற்றம் உண்டாகிறது. இதனால் கோபம், ஆசை தோன்றி நோய்கள் உண்டாகிறது.

Share