அகஸ்தியர் வைத்திய சதகம் – 26

அகஸ்தியர் வைத்திய சதகம் – 26

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 26*

கொண்டஉலகேடனை தான் உறவு கொள்ளில் கொள்வதற்கு ஆசைகொள்ளல் குணம் மூன்றே கேள்
தண்டமிழோர் அறியும் ராசத தாமதமும் சாத்வீகம் மூன்றினுட தகமை கேளாய்
கண்டபடி ராசதம் ஆங்சாரமாகி காசினியில் அமிர்த குணமாயிருப்பன்
உண்டி பெருத்திடும் சோம்பு தாமதம் தானும் உன்மத்த மதவெறியாய் இருப்பன் தானே.

*பொருள் : * உலகேடனை என்பது மண்ணாசை ஆகும். குணம் மூன்று எவை எனில் தமிழர்கள் அறியும் ராசத குணம், தாமத குணம், சாத்வீக குணம் என்னும் மூன்று ஆகும். ராசத குணம் என்பது எது எனில் இப்பூவுலகில் அமிர்த குணமாக இருக்கும். அதிக உணவு உட்கொள்பவனாகவும், சோம்பல் உடையவனாகவும் இருப்பான். தாமத குணம் உடையவன் வெறி உடையவனாய் இருப்பான்.

Share