அகஸ்தியர் வைத்திய சதகம் – 27

அகஸ்தியர் வைத்திய சதகம் – 27

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 27*

தானமுள்ள சாத்மீகம் குளிர்ந்த சொல்லாய் சகலருக்கும் அமிர்த குணமாய்இருக்கை
ஏனமுள்ள விகாரம் எட்டும்சொல்லக்கேளாய் இயல் காமம்குரோதமுடன்லோபம் மோகம்
ஆனமதம் ஆச்சரியம் இடும்பை வேகம் ஆக எட்டில் காமமது ஆசையாச்சு
ஈனமுறும் குரோதமது பிணக்கு லோபம் இயல்வான பிடிப்பாடுதானுமாச்சே.

*பொருள் :* சாத்வீக குணம் உடையவன் அமைதியான வார்த்தைகளைப் பேசி சமாதானம் கொண்டவனாக இருப்பான். விகாரம் எட்டு எவை எனில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், ஆச்சரியம், இடும்பை,வேகம் இவைகள் ஆகும். காமம் என்பது ஆசை. குரோதம் என்பது பிணக்கு. லோபம் என்பது பிடிப்பாடு ஆகும்.

Share