அகஸ்தியர் வைத்திய சதகம் – 28

அகஸ்தியர் வைத்திய சதகம் – 28

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 28*

ஆமிந்த மோகமது பிரியமாச்சு அடுத்த மதமாவதுவே கருவுமாச்சு
ஓமிந்த ஆச்சரியம் கூரமாச்சு உறும் இடும்பை தானும் உதாசீனமாச்சு
வேமந்த வேகமது கொடூரமாச்சு வேறுஇருவினை இரண்டும் விள்ளக்கேளு
தாமந்த நல்வினை தீவினை தான் இரண்டும் தயவான புண்ணியம் தான் நல்வினை தானாச்சே.

*பொருள் :* மோகம் என்பது பிரியம். மதம் என்பது கரு. ஆச்சரியம் என்பது கூரம். இடும்பை என்பது உதாசீனம். வேகம் என்பது கொடூரம் ஆகும். வினைகள் இரண்டு வகைப்படும். எவை எனில் நல்வினை,தீவினை என்பன ஆகும். புண்ணியக் காரியங்கள் செய்வது நல்வினை

Share