அகஸ்தியர் வைத்திய சதகம் – 29

அகஸ்தியர் வைத்திய சதகம் – 29

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 29*

புண்ணியமே அல்ல தீவினையே பாவம் புனிதமுறும் அவஸ்தை அஞ்சு சொல்லக்கேளு
திண்ணமுறும் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி சேர்ந்த துரியம் துரியாதீதத்தினோடு
வண்ணமுறும் சாக்கிரமே லாடத்தானம் வரும்பொpய சொப்பனமே கண்டத்தானம்
எண்ணமுறும் சுழுத்தி இருதயமாம் தானம் இதமான துரியமது நாபி காணே.

*பொருள் :* புண்ணியம் அல்லாது பாவக் காரியங்கள் செய்வது தீவினை ஆகும். அவத்தை 5 எவைகள் எனில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி,துரியம், துரியாதீதம் இவைகள் ஆகும். சாக்கிரத்தின் இருப்பிடம் லாடத்தானம். சொப்பனத்தின் இருப்பிடம் கண்டத்தானம், சுழுத்தியின் இருப்பிடம் இதயக் கமலம், துரியத்தின் இருப்பிடம் நாபி (தொப்புள்)

Share