அகஸ்தியர் வைத்திய சதகம் – 33

அகஸ்தியர் வைத்திய சதகம் – 33

  • *அகஸ்தியர் வைத்திய சதகம் – 33*

சொல்லுகின்ற வாத பித்தசேத்துமம் தன்னில் சுகமான பித்தமது பூதநாடி
வெல்லுகின்ற குருநாடி ஆத்தும நாடி வெகு நோயை அகற்றி நலம் காட்டும் நாடி
பல்லுயிர்க்கும் தானாகி இருந்த நாடி பலகோடி அண்டமெல்லாம் நிறைந்த நாடி
அல்லலறும் ஆங்கார பிராண நாடி அக்கினியை சேர்ந்தெழுந்த நாடி தானே.

பொருள் : வாத, பித்த, சேத்துமம் ஆகிய மூன்று நாடிகளுள் பித்த நாடியானது பூத நாடி, குருநாடி, ஆத்ம நாடி, நோய்களை அகற்றி நலம் காட்டும் நாடி, பல உயிர்களுக்கும் முக்கியமாக இருந்த நாடி,பலகோடி அண்டங்கள் எல்லாம் நிறைந்த நாடி, ஆங்கார பிராண நாடி, அக்கினியை சார்ந்த நாடி ஆகும்.

Share