அகஸ்தியர் வைத்திய சதகம் – 34

அகஸ்தியர் வைத்திய சதகம் – 34

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 34*

நாடி என்றால் நாடியல்ல நரம்பில் தானே நலமாக துடிக்கின்ற துடிதான் அல்ல
நாடி என்றால் வாத பித்த சிலேற்பனமும் அல்ல நாடி எழுபத்தி ஈராயிரம் தான் அல்ல
நாடி என்றால் அண்டபகிரண்டமெல்லாம் நாடி எழுவகை தோற்றத்துள்ளாய் நின்ற
நாடியது ஆராய்ந்து பார்த்தாரானால் நாடியுறும் பொருள் தெளிந்து நாடுவாரே.

*பொருள் :* நாடி என்றால் நாடி அல்ல. நரம்புகள் துடிக்கின்ற துடிப்பும் அல்ல. நாடி என்றால் வாத, பித்த, சிலேற்பனமும் அல்ல. நாடி 72000அல்ல. நாடி என்றால் இப்பூவுலகு, விண்ணுலகு ஆகிய இடங்களில் உள்ள எழுவகை தோற்றத்திற்கும் உள்ளாகி அதனுள் நாடி ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே நாடியின் பொருள் தெரியும்.

Share