அகஸ்தியர் வைத்திய சதகம் – 40

அகஸ்தியர் வைத்திய சதகம் – 40

  1. *அகஸ்தியர் வைத்திய சதகம் – 40*

திண்ணமுறும் வாதத்தில் சேத்துமம் சேர்ந்த தேககுணம் மதகரி போல் நடக்கும் காயம்

வண்ணமுற தூலமதாம் உயர்ந்தமேனி வார்த்தை இடிபோலாகும் யோகமுண்டாம்

நிண்ணயமாம் கலைஞான அறிவும்உண்டாம் நேரிழைமேல் மிக ஆசை நிறமே செம்மை

உண்ணுவது புளிப்பு எரிப்பு அதிகம் வேண்டும் உயர்ந்தோருக்கு ஆசாரம் செய்வான் தானே.

*பொருள் :* வாதத்தில் சேத்துமம் சேர்ந்த உடல் கூறு எது எனில் யானையைப் போல் வலுவாக நடக்கும் குணம் உடையவர்களாகவும், மிகப்பெரிய தூலத்தை உடையவர்களாகவும், இடி முழக்கம் போன்ற வார்த்தைகளை பேசுபவர்களாகவும், போகத்தில் பிரியம் உடையவர்களாகவும்,பல்வேறு கலைகளில் ஞான, அறிவு உடையவர்களாகவும்,பெண்கள் மீது மிகவும் ஆசை உடையவர்களாகவும், செம்மை நிறம் உடையவர்களாகவும், புளிப்பு சுவையும், எரிப்பு சுவையும் அதிகம் கொள்பவர்களாகவும், உயர்ந்தவர்களுக்கு பணிவிடைகள் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

Share