அகஸ்தியர் வைத்திய சதகம் – 43

அகஸ்தியர் வைத்திய சதகம் – 43

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 43*
உறவான பித்தத்தில் வாதம் சேர்ந்து உரத்தெழுந்த தேகம் பொது நிறமேயாகும்

நிறைவான குணம் கிருபை புகழ்ச்சி வீரம் நெறி நேர்மை சுகி குளிர்ச்சி யோகம் ஞானம்

மறைவான கவனம் நற்கந்தம் வேண்டும் வாய்ஞானம் அதிகபுத்தி குயில்போல்வார்த்தை

துறவான உடல் வரட்சி பசி பொறாமை சூடெரிப்பதிகம் உண்ணும் சொல்லே.

*பொருள் :* பித்தத்தில் வாதம் சேர்ந்த உடல் கூறு எது எனில் பொது நிறமாக இருக்கும். நிறைந்த குணம், கருணை, புகழ், வீரம், நேர்மை,சுகவான், குளிர்ச்சி, யோகம், ஞானம் போன்றவைகள் உடையவனாகவும், நல்ல கவனத்தோடும் நடக்க கூடியவனாகவும் இருப்பான். நற்கந்தம் வேண்டுபவனாகவும், வாய் ஞானம், நல்ல புத்தி, குயில் போன்ற வார்த்தை உடையவனாகவும், வறண்ட உடல் கட்டை உடையவனாகவும், பசி, பொறாமை உடையவனாகவும்,சூடு மற்றும் எரிப்பு உள்ள பொருட்களை அதிகம் உண்பவனாகவும் இருப்பான்.

Share