அகஸ்தியர் வைத்திய சதகம் – 52

அகஸ்தியர் வைத்திய சதகம் – 52

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 52*

சிறப்பான பித்தத்தில் வாதநாடி சேரில் உறுந்தாது நட்டம் உதரபீடை

உறைப்பாக செரியாமை குன்மம் சூலை உற்றசுரம் கிறாணி வயிற்றிரைச்சல் மந்தம்

அறைப்பான ஓங்கார பிறநீர்க்கோவை ஆயாசம் கிறுக்கோடு மயக்கம் மூர்ச்சை

முறைகாய்வு விசவீக்கம் மூலவாய்வு முரடான நோய்பலவும் முடுகும் பண்பே.

*பொருள் :* பித்தத்தில் வாத நாடி சேர்ந்தால் குணம் ஏதெனில் தாது நட்டம், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், செரியாமை, குன்மம்,சூலை, சுரம், கிராணி, வயிறு இரைச்சல், வயிறு மந்தம், பிற நீர் கோவை, அசதி, கிரிசம், மயக்கம், மூர்ச்சை, முறைச்சுரம், விஷ வீக்கங்கள், மூல வாய்வு போன்ற நோய்கள் காணலாம்.

Share