அப்பருக்கு சிவன்பெருமான் சோறு கொடுத்த இடம்

அப்பருக்கு சிவன்பெருமான் சோறு கொடுத்த இடம்

திருச்சிராப்பள்ளி-திருப்பைஞ்ஞிலி அப்பருக்கு(திருநாவுகரசர்) பொதிச்சோறு கொடுத்த இடம்.(திருப்பைஞ்ஞிலி – சுனைபுகழ்நல்லூர் சாலையில் உள்ளது)

அப்பர் திருக்கற்குடி, திருப்பராய்துறை தலங்களை தரிசனம் செய்துவிட்டு திருப்பைஞ்ஞிலி தலம் நோக்கி சென்றார். அப்பர் சுனைபுகழ்நல்லுர் வழியே திருப்பைஞ்ஞிலி செல்லும் போது தாகமும் பசியும் உண்டானது. சிவபெருமான் அந்தணர் உருவில் வந்து பொதிச் சோறு கொடுத்து தண்ணீர் கொடுதார். அந்த இடம் இதுவே படத்தில் காண்க.

பெரியபுராணம்
—————————-

304. வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையோடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பார் ஆய்.
உரை

305. காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம்.
உரை

306. அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்.
உரை

307. நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதா அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்.
உரை

308. எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவது என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார்.

Share