உறையூர் திருச்சி வெக்காளியம்மன் Woraiyur Vekkaliamman Temple History In Trichy

உறையூர் திருச்சி வெக்காளியம்மன் Woraiyur Vekkaliamman Temple History In Trichy

history of Trichy vekkaliamman

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன்
உறையூர் சோழர்களுக்கு தலைநகரமாக விளங்கியது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. உறையூருக்கு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்திருக்கொரு பஸ் இருக்கிறது. நாச்சியார் கோவில் பஸ் நிறுத்ததில் இறங்கி 500 மீ நடக்க வேண்டும் அல்லது ஆட்டோவிலும் செல்லலாம்.
ஊர்களை அமைக்கும் போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வது, வீரமும் வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள் அதன்படி ஊர் எல்லையிலும் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள் மிகு வெக்காளியம்மன் திருக்கோவில்.
இந்த கோவில் அமைந்ததற்கு மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது. உறையூரில் பராந்தகன் என்னும் அரசன் தனது மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பலவகை மலர்செடிகளையும் பயிரிட்டு மலர் கொய்து தொடுத்து தாயுமானவர் சுவாமிக்கு அளித்து அழகு பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில் பிராந்தகன் என்னும் பூ வணிகன் அரசரிடம் ஆதரவு பெற எண்ணி நந்தவனத்து மலர்களை பறித்து அரசருக்கு அளிக்கத் தொடங்கினான் அரசரும் உயர்வான மலர்களைக் கண்டு உள்ளம் களித்து தாயுமானவருக்கு மட்டுமே அளிப்பதற்கென சாரமா முனிவர் அமைந்த நந்தவனத்து மலர்கள் என்றும் அறிந்தும் கூட தவறான ஆசையால் வணிகனிடம் நாளும் மலர்களை பறித்துவர ஆணையிட்டான்.
நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதைக்கண்ட சாரமா முனிவர் ஒரு நாள் வணிகன் மலர் கொய்யும் போது பிடிப்பட்டான். தாயுமானவருக்கு ரிய மலர்கள் அரசனுக்கு செல்வதைக் கண்டு சினந்து மன்னரிடம் முறையிட்டான். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்க மனம் நொந்த முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார். தனக்குச் செய்யும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்கு செய்கின்ற இடர்களை தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கியதால் மண்மாரி பொழியத் தொடங்கியது. இதனால் உறையூர் மண் மூடியது
மக்கள் தங்களைக் காக்க எல்லைத் தெய்வமாக விளங்கிய வெக்காளி அம்மனை விட்டால் வேறு வழியில்லை ஓலமிட்டு சரண் அடைந்தனர். அன்னை இறைவனை வேண்டினாள் மண்மாரி நின்றது. ஆனாலும் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்கள் துயர் கண்டு அன்னை வெக்காளியம்மன் உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று கூறியதாக வரலாறு கூறுகிறது.

Share