கடவுள் என்றால் என்ன? தெய்வம் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன? தெய்வம் என்றால் என்ன?

பரம்பொருள்(கடவுள்/இறைவன்) ஒன்றுதான், ஆனால் தெய்வங்கள் பல.

பரம் என்றால் ஒரு பொருளின் முந்தைய நிலையை குறிக்கும்.
பரம்பொருள் என்றால் பிரபஞ்சம் உருவாதற்க்கு முன் இருந்த ஒரு பொருளாகும். அப்பொருளிலிருந்து உருவானதே அண்டசராசரங்களும் அனைத்து ஜீவராசிகளும். அப்பரம்பொருளே ஆதியும் அந்தமும் அற்ற பரமசிவன். பிரபஞ்சம் உருவாவதற்க்கு தேவையான சக்தியே ஆதிபராசக்தி. அ-அரன்(சிவன்), உ-உமை(சக்தி) ம்-பிரம்மம்(படைத்தல்) (அ+உ ம் = ஓம்)சிவமும் சக்தியும் இணைந்து பிரபஞ்சம் உருவாகும் போது ஓம் என்னும் ஒலி உண்டானது. அதனால் சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை. இவ்விருவரும் இல்லையேல் அண்டசராசரங்களும் ஜீவராசிகளும் இல்லை. அதுவே பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம் ஏதுமற்ற ஏகாந்தநிலை.

தெய்வம் என்றால் தெய். அதாவது பரம்பொருளிலிருந்து தேய்ந்து உருவானதே தெய்வம். சிருஷ்டி இயக்கம் சரியாக இயங்க பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

Share