சித்தர்கள் யார் ?

சித்தர்கள் யார் ?

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள். எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

சித்திகள் எண்வகை உண்டு

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

அட்டமா சித்திகள் விளக்கம்
—————————————————
அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

Share