சிவசிந்தை பாகம்-2

சிவசிந்தை பாகம்-2

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்.

*இறைவன்*

இறைவனின் பொது இயல்பில் நேற்று அவர் அருவம் உருவம் அருவுருவம் எனும் மூன்று நிலைகளை எடுப்பதை பார்த்தோம்.

இனி.

இவைகளை ஏன் எடுக்க வேண்டும் என பார்ப்போம்.

இறைவன் என்ன வேலையில்லாதவனா இவைகளை எல்லாம் செய்ய என கேட்டால் அவன் வேலை செய்கிறான். ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல ஐந்து தொழில்களை செய்கிறான். அவைகளை செய்வதற்காக த் தான் இந்த நிலைகளில் வருகிறார்.

சரி இவைகளை செய்வதால் இறைவனுக்கு என்ன ஊதியம்?

என்று கேட்டால், ஐந்து தொழில்களை செய்தாலும் அதில் சிறு துளியும் இறைவன் தனக்காக செய்து கொள்வதில்லை.
ஏன் என்றால் அவன் ஆனந்த பரிபூரணன். எல்லையில்லாத ஆனந்தமுடையவன்… எண்குணத்தான். அவனுக்கென எதுவும் செய்து அதை வைத்து பயனடைய வேண்டும் என்ற எந்த தேவையும் இறைவனுக்கில்லை.

பிறகு யாருக்காக செய்கிறார் என்றால். இந்த ஆன்மாக்களுக்காக. ஆணவத்தில் கட்டுண்ட உயிர்களுக்கு பசு என்று பெயர். அந்த பசுக்களை உய்விக்கும் பொருட்டு இவைகளை செய்கிறார்.

அப்படி என்ன தொழில் தான் செய்கிறார் அவர்.

1 படைத்தல்
2 காத்தல்
3 ஓடுக்குதல். ( அழித்தல் அல்ல. சைவத்தில் அழித்தல் எனும் கொள்கை இல்லை)
4 மறைத்தல்
5 அருளல்

இவைகளின் விளக்கம் பார்ப்போம்.

*படைத்தல்*

பசுக்களாகிய உயிர்களை மல நீக்கம் செய்ய இறைவன் சங்கல்ப்பித்து மாயையில் இருந்து தனு கரண புவன போகங்களை படைக்கிறார். இதன் விளக்கத்தை முன்னமே பார்த்துவிட்டோம்.

அநாதிப் பொருளான உயிர்களுக்கு உடலை படைக்கிறார் இறைவன். பிரபஞ்சத்தையும் படைக்கிறார்.

*காத்தல்*

இந்த ஆணவமல பற்று நீங்க இந்த உயிர்களுக்கு உலகம் கொடுக்கப் பட்டதல்லவா.. அதை அவரே காத்தும் வருகிறான்… சரியாக முறைப்படுத்தி வரையறை ப்படுத்தி காத்தும் வருகிறார். இன்ப துனாபங்களை கொடுத்து இல்லற வாழ்கை கொடுத்து நல்ல உணவைக் கொடுத்து துணி மணிகளைக்கொடுத்து இவைகளை எலாலாம் கொடுத்து அனுபவித்து அனுபவித்து இவற்றில் இருந்து வெளியே வா என்ற எண்ணத்தால் இவைகளை காக்கவும் செய்கிறான்.
*ஒடுக்குதல்*

முதலில் அவன் சங்கல்பம் என்ன என்பதை காண்போம்.

இந்த உயிர்கள் இந்த உலக விழ்கையை அனுபவித்து அதன் மீது உள்ள பற்று நீங்கும் வரை அனுபவித்து தானாக அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதே அவன் சங்கல்பம்.

உதாரணம்.

புளியங்காய் இளசாக இருக்கும் போது அதன் கனத்த தோல் புளி விதை எல்லாம் ஒன்றாக இருக்கும். நாள் போக போக அது முதிர்ச்சி அடைந்து வருகிறது. அப்போது அதில் இருந்து பழம் மட்டும் தோலைவிட்டு தானாக பிரிந்து தனியாகிவிடுகிறது.

அது போல் உயிர்களும் இந்த அனுபவத்தால் உலக வாழ்வில் பற்றி நீங்கி முதிற்ச்சி அடைந்து நம்மிடம் வந்து சேரட்டும் என்பதே அவன் சங்கல்பம்.

ஆனால் இது நடக்கிறதா..

அவன் 100 வயதை கொடுத்து வாழச்சொல்லி அனுப்பி இதன் மீது பற்று அறுத்து வா என்றால் நமக்கோ பற்று அதிகமாகிவிடுகிறது.

90 வயது வரை வாழ்ந்த அனுபவத்தில் இந்த ஆசைகள் அடங்கி இருக்க வேண்டும். அது அடங்கவில்லை. மேலும் மேலும் பணம் வேண்டும் புகழ் வேண்டும் என்று தொடர்ந்து ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது.

அதற்குள் நம் சட்டை (உடல்) பாழடைந்துவிடுகிறது. இன்னிலையில் உயிருக்கு புதிய உடலைக்கொடுக்க அந்த உயிரை அந்த உடலில் இருந்து பிரித்து தனக்கள்ளே ஒடுக்கி க்கொள்கிறான்..இதனால் தான் இறப்பு வருகிறது.

பிறகு வேறு உடலை அந்த உயிருக்கு அறிமுகப்படுத்துகிறார்.

மீதம் நாளை பார்ப்போம்.

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

Share