திருமந்திரம் -10

திருமந்திரம் -10

*திருமந்திரம்*

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெருக்கொடு கோங்குபுக் காரே.

*விளக்கவுரை:*
சிவக்கொழுந்தின்மாட்டு வைக்கும் அன்பாகிய தவம், சிவபெருமான் மாட்டுச் செல்லும் ஆர்வத்தினை விளைக்கும். அத்தகைய
ஆர்வமுடையவர் சிவபெருமானை அருளால் காண்பர். அவ்வார்வ விளைவு ஈரமாகிய நண்பினைத் தரும். அத்தகைய நண்பினர் சிவபெருமான் இணையிலாத் திருவடியிணையினைக் காண்பர். உலகியற் பற்றால் குடும்பப் பாரமுடையவர் பிறப்பு இறப்புத் தடுமாற்றத்தைக் காண்பர். இவர்கள் எய்தும் கடும் துன்பத்தினை வாயினாலும் சொல்லொணா தென்க. மேலும் இருளுலகத் துன்பமும் எய்துவர். கோங்கு: மாறுபாடு எனக்கொண்டு அதனைத் திசைச்சொல் எனவுங் கூறுவர். அன்பு ஆர்வம் முதலியவற்றைக் கண்ணப்ப நாயனார் திருவரலாற்றிலே ‘முன்பு செய்தவத்தி னீட்டம்’ எனவரும் திருப்பாட்டான் உணர்க.

Share