திருமந்திரம் – 183

திருமந்திரம் – 183

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

அறியு பூர்வமான செயல் யாதெனில் குருவின் உருவம் கண்டு வணங்குதல். அறிவானது குருவின் திருப்பெயரை சொல்லிக் கொண்டிருத்தல். அறிவு பூர்வமானது குருவின் திருவார்த்தை கேட்பது. குருவின் உருவத்தை நெஞ்சில் நிலைத்து நினைத்து இருத்தல்.

குரு என்பது சிவனாகவும் கொள்ளலாம். கு என்றால் இருட்டு, ரு என்றால் வெளிச்சம். அதாவது அறியாமை என்னும் இருளிலிருந்து அறிவு என்னும் வெளிச்சத்தை காட்டுபவனே சிறந்த குரு ஆவார்.

Share