திருமந்திரம்

திருமந்திரம்

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்

போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி

மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று

ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே.

 

பொருள்:
அருளால் அகத்தவம் புரியும் யோகிகள் காலாகிய உயிர்ப்பினை நடுநாடி வழியாகச் செலுத்திப் புருவ நடுவாகிய மதிமண்டலத்திற்கு ஏற்றுவர். ஏற்றி ஆங்குத் தோன்றும் இயற்கை உண்மை அறிவு இன்பமாகிய திருவடியுணர்வமிழ்தை நுகர்வர். அங்ஙனம் நுகர்ந்தவர் சிவபெருமானது எண்குணச் சித்தியும் எய்துவர். எய்துவர் என்பது அவாய் நிலையான். வந்தது. அறிவழி கள்ளினை உண்டு பின்னும் உண்ணப் பெருவேட்கை கொண்டு உண்டுண்டு உழலும் மோகியர் மூடராவர். மோகம் பெருகிய மதத்தால் அறிவழிந்தவராவர்.

Share