திருமந்திரம் – 368

திருமந்திரம் – 368

*திருமந்திரம் – 368*
– படைப்பு
ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

*பொருள்:* தொடக்கமும் ஈறும், பிறப்பும் இறப்பும், எழுவாயும் இறுவாயும் ஆகிய ஆதியோடு அந்தமும் இலாத விழுமிய முழுமுதற் பெரும் பொருள் சிவபெருமான். அச் சிவபெருமானுக்குத் திருவுடலாய்ப் புணரும் பேரறிவுப் பெரும் பொருள் பராபரை எனப்படும். பராபரை என்பதும் பராசத்தி என்பதும் ஒன்றே. அதுவே வனப்பாற்றலெனப்படும். அவ் வனப்பாற்றல் அளவில் பேரொளியாய்த் திகழும். அப் பேரொளியினின்றும் அப்பாலாம் சிவம் தோன்றும். அப்பாலாம் சிவம் துரியாதீத சிவன் எனப்படும். அதனையே பரம் என்பர். அச் சிவன் தோன்றுதற்கு நிலைக்களமாக முதற்கண் ஓசையாகிய நாதம் தோன்றும்.

Share