திருமந்திரம் – 427

திருமந்திரம் – 427

*திருமந்திரம் – 427*

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்கவல் லானே.

*பொருள்:* அருஞ்சைவர் மெய் முப்பத்தாறனுள் முடிந்த முடிபாக விளங்கும் முப்பத்தாறாம் மெய் ஒலி என்ப. அஃது ஒளிவண்ணமாக விருக்கும் அது மெய்களின் உச்சியில் சிறந்திருக்கும்.

உச்சி – அந்தம். மெய் – தத்துவம். ஒலி – நாதம்.

அவ் வொளிவண்ணமாம் ஒலியினை நேரே இயக்கும் சிவபெருமானை முழுவிருப்பத்துடன் வழிபட்டு இன்பங்கொள்வார்க்கு வரும் பிறப்பில்லை அதனால் அவர்தம் இறப்புக் காலத்தும் கூற்றுவனுக்கு அவர்பால் வேலையில்லை.

Share