திருமந்திரம் – 735

திருமந்திரம் – 735

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே.

காமம் குறைத்தால் உடல் அழியாது. உடம்பு மெலிந்து இருந்தால் உயிர் நெடுநாள் வாழும். உணவு கட்டுப்பாடு இருப்பின் அது பல நன்மைகளை தரும். இம்முறைகளை பின்பற்றினால், நீல நிறமுடைய கழுத்தும், கையில் மண்டை ஓடு சுமந்த சிவன் போல் நீயும் ஆகலாம்.

Share